அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு முன்னர் தலைமைகளின் அரசியல் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் : சந்திரிகா குமாரதுங்க

Thursday, February 27th, 2025 at 8:24 (SLT)

எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் தலைவர்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டுமெனவும், அன்றேல் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாதெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று நாட்டை வந்தடையும்

Thursday, February 27th, 2025 at 8:19 (SLT)

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று(27.02) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஐ.நா. தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவு : இந்தியா புறக்கணிப்பு

Thursday, February 27th, 2025 at 7:30 (SLT)

ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை முன்னிட்டு உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண, ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானமும், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு தீர்மானமும் கொண்டு வந்தன.

மேலும் வாசிக்க >>>

நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டத்திற்கு தயாராகும் தாதியர்கள்

Thursday, February 27th, 2025 at 7:26 (SLT)

2025 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் முன்பாகவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனின் கதியை அறியாமலேயே மற்றுமொரு தமிழ் தாய் காலமானார்

Wednesday, February 26th, 2025 at 8:17 (SLT)

வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தனது புதல்வருக்கு நேர்ந்த கதி என்னவென்பதை வெளிப்படுத்தக் கோரி சுமார் எட்டு வருடங்களாகப் போராடிய மற்றுமொரு தமிழ்த் தாய் பதில் தெரியாமலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அரசியலமைப்புக்கு அமைய ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும் நம்பகமான முறையிலும் இயங்கும் : ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் விஜித்த ஹேரத்

Wednesday, February 26th, 2025 at 7:10 (SLT)

.

சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அறிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடின்றி முற்றாக நீக்கவேண்டும்: அதுவே ஊடகவியலாளர் பாரதிக்கான அஞ்சலி அரசியல்வாதிகள் பலரும் சுட்டிக்காட்டு

Wednesday, February 26th, 2025 at 7:04 (SLT)

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். அதேவேளை அச்சட்டத்தினை பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்குவது மிகமிக அவசியமாகும் என பயங்கரவாதச்சட்ட ஒழிப்பை நீண்டகாலமாகக் கோரிவரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோகணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டம்

Wednesday, February 26th, 2025 at 6:58 (SLT)

காட்டு போலி​யோ வைரஸ் பதிவானதைத் தொடர்ந்து போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டத்தை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

Wednesday, February 26th, 2025 at 6:55 (SLT)

மகா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன், தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நெடுந்தீவில் உழவு இயந்திர விபத்து இளம் குடும்பஸத்தர் பலி

Tuesday, February 25th, 2025 at 9:05 (SLT)

நெடுந்தீவில் நேற்று இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஒடிசாவில் பாரிய நிலநடுக்கம்

Tuesday, February 25th, 2025 at 9:00 (SLT)

ஒடிசாவின் பூரி அருகே வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6:10 மணிக்கு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது கொல்கத்தாவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் கைது

Tuesday, February 25th, 2025 at 8:57 (SLT)

கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக ஒரு ஆண் மற்றும் பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெருமதிமிக்க குஷ் கஞ்சாவுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது 

Tuesday, February 25th, 2025 at 6:08 (SLT)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திங்கட்கிழமை (24) 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெருமதிமிக்க குஷ் கஞ்சாவுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை : அமைச்சர் ஆனந்த விஜேபால

Tuesday, February 25th, 2025 at 6:04 (SLT)

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கலந்துரையாடப்பட்டதுடன், தேவையான பாதுகாப்பை வழங்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் உறுப்பினர்களுக்குக் காணப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தற்போது ஆராய்ந்து இறுதி அறிக்கைகளைத் தயாரித்து வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் : உயர்ஸ்தானிகரின் தொடக்க உரையில் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படவில்லை

Tuesday, February 25th, 2025 at 6:00 (SLT)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (22) ஆரம்பமான நிலையில், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் தொடக்க உரையில் இலங்கை குறித்து விசேடமாக எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

மேலும் வாசிக்க >>>