அரசியல் வங்குரோத்து நிலையடைந்துள்ளவர்கள் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற சுலோகத்தை தற்போது கையிலெடுத்துள்ளார்கள் : டி.பி சரத்

Monday, February 24th, 2025 at 10:54 (SLT)

அரசியல் வங்குரோத்து நிலையடைந்துள்ளவர்கள் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற சுலோகத்தை தற்போது கையிலெடுத்துள்ளார்கள். கடந்த அரசாங்கங்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு பாதாளக் குழுக்களை போசித்தார்கள். எமது அரசாங்கத்தில் பாதாளக் குழுக்களின் செயற்பாடு இல்லாதொழிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி சரத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பல்பொருள் அங்காடியில் திருட்டு ; உப பொலிஸ் பரிசோதகர் கைது : கண்டியில் சம்பவம்

Monday, February 24th, 2025 at 10:45 (SLT)

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிபத்கும்புர பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடியதாகக் கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பாதுகாப்புப் படைகளிலிலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாகக் கைதுசெய்ய உத்தரவு : பாதுகாப்புச் செயலாளர்

Monday, February 24th, 2025 at 10:43 (SLT)

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார்.நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜைகள் மீட்பு

Monday, February 24th, 2025 at 10:38 (SLT)

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை : சிறுநீரகம் செயலிழந்திருக்கலாம் என அச்சம்

Monday, February 24th, 2025 at 10:35 (SLT)

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தொடர்ந்தும் ஆபத்தான நிலையிலேயே உள்ளார் என தெரிவித்துள்ள வத்திக்கான் குருதிபரிசோதனைகளின் போது அவரது சிறுநீரகம் செயல் இழந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள்தென்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

Sunday, February 23rd, 2025 at 11:42 (SLT)

சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வைரஸானது மனிதர்களைப் பாதிக்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழ் ஒலிபரப்பில் முன்னோடியாக விளங்கிய ஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்

Sunday, February 23rd, 2025 at 11:39 (SLT)

தமிழோசை ஆனந்தி’ என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை லண்டனில் காலமானார்.யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரான ஆனந்தி சூர்யப்பிரகாசம், இலங்கை வானொலியில் சனா அவர்களின் தயாரிப்பில் உருவான பல நாடகங்களில் நடித்துப்புகழ்பெற்றார். சமகாலத்தில் அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார்.

மேலும் வாசிக்க >>>

வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி

Sunday, February 23rd, 2025 at 11:37 (SLT)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் வாசிக்க >>>

கணேமுல்ல சஞ்சீவ கொலை : மேலும் மூவர் கைது

Sunday, February 23rd, 2025 at 11:35 (SLT)

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் அத்தியவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு:சமல் சஞ்சீவ

Sunday, February 23rd, 2025 at 11:31 (SLT)

நாட்டில் தற்போது அத்தியவசிய மருந்துகள் உட்பட சுமார் 90 வகையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை கோரும் தீர்மானத்துடன் விஜித தலைமையிலான குழு இன்று ஜெனிவா செல்கிறது

Sunday, February 23rd, 2025 at 11:28 (SLT)

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு இன்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

மேலும் வாசிக்க >>>

ஏன் ஆந்திர, கேரளா, பாகிஸ்தான் கடலுக்கு செல்வதில்லை இந்திய மீனவர்கள்:அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

Sunday, February 23rd, 2025 at 10:00 (SLT)

இலங்கை கடற்படையால் தமிழக கைது செய்யப்படுவதை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டித்துள்ளார். இதற்கு இலங்கை கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பதிலளித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கூறுகையில்,

மேலும் வாசிக்க >>>

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரலில் இலங்கை வருகிறார் : சம்பூர் சூரிய மின் திட்டம் ஆரம்பிக்கப்படும்

Sunday, February 23rd, 2025 at 9:52 (SLT)

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பரிசுத்த பாப்பரசர் ஆபத்தான நிலையில்

Sunday, February 23rd, 2025 at 9:49 (SLT)

சுவாசப்பாதிப்பு காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆபத்தான நிலையில் உள்ளார் என அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அஸ்;துமா போன்ற சுவாச பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசரின் நிலை தொடர்ந்தும் மோசமடைந்துவருகின்றதுஎன வத்திக்கான் தகவல்கள்தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

பிரான்சில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் பலி : இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என ஜனாதிபதி தெரிவிப்பு

Sunday, February 23rd, 2025 at 9:46 (SLT)

பிரான்சின் முல்ஹவுஸ் நகரி;ல் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து பயங்கரவாத குற்றம் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>