மத்ரஸா மாணவர்களை கடத்திச்செல்ல முயற்சி

Wednesday, March 11th, 2026 at 11:44 (SLT)

புத்தளம், அல்-ஹஸனாத் வீதியில் சிறுவர்களைக் கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10) பதிவாகியுள்ளது. அல்-ஹஸனாத் பள்ளிவாசல் வீதி, எட்டாவது ஒழுங்கையில் அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸாவிலிருந்து காலை நேரப் பாட முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை, முகக்கவசம் அணிந்திருந்த நான்கு மர்ம நபர்கள் துரத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

Wednesday, March 11th, 2026 at 11:38 (SLT)

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது தந்தையார் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு, கடந்த திங்கட்கிழமை மொஜ்தபா கமேனி புதிய தலைவராகப் பெயரிடப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் – நீதவான் பிறப்பித்த உத்தரவு

Wednesday, March 11th, 2026 at 11:36 (SLT)

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) முற்பகல் காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும் வாசிக்க >>>

புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்

Wednesday, March 11th, 2026 at 11:33 (SLT)

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கொழும்பு புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலுடன் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இவ்வாறாகா சீனி, தேங்காய் எண்ணெய் பருப்பு உள்ளிட்ட தானிய வகைகள் பதுக்கப்பட்டு விலையேற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

லெபனானில் போர் பதற்றம் தீவிரம் : 07 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு

Wednesday, March 11th, 2026 at 11:30 (SLT)

லெபனானில் நிலவும் பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.இஸ்ரேல் வெளியிட்ட கட்டாய இடம்பெயர்வு உத்தரவுகளால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம் : இஸ்ரேல் பிரதமர்

Wednesday, March 11th, 2026 at 11:26 (SLT)

ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் மின் தடைகள்

Wednesday, March 11th, 2026 at 8:34 (SLT)

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

2026 ம் ஆண்டின் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடத்தில் இவரா? 27% அதிகரித்த டிரம்பின் சொத்து

Wednesday, March 11th, 2026 at 8:30 (SLT)

2026 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ்(Forbes) உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா(Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் சுமார் $839 பில்லியன் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் புதிய தலைவரை இலக்கு வைக்கும் இஸ்ரேல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு

Wednesday, March 11th, 2026 at 8:17 (SLT)

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) ஈரானின் புதிய உச்ச தலைவராக அந்நாட்டு நிபுணர்கள் குழுவினால் (Assembly of Experts) மார்ச் 8-ம் தேதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள முடியவில்லையா? : உதவுகிறது இலங்கை செஞ்சிலுவை சங்கம்

Wednesday, March 11th, 2026 at 8:11 (SLT)

ஈரான் உள்ளடங்கலாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப்பிரஜைகளுக்கு உதவும் வகையில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அவசர தொடர்பு இலக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் ‘ஷிரீன் லத்தீப் பெண் தலைமைத்துவ விருது’ 

Wednesday, March 11th, 2026 at 8:06 (SLT)

பெண் தலைமைத்துவம் மற்றும் பெண் வலுவூட்டலுக்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆற்றிவரும் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டி, பிலிப்பைன்ஸில் ‘ஷிரீன் லத்தீப் பெண் தலைமைத்துவ விருது’ பிரதமருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

நாம் அமெரிக்காவுக்கே எமது பூரண ஒத்துழைப்பை வழங்குகிறோம் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

Tuesday, March 10th, 2026 at 9:11 (SLT)

இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ எவ்வித தெளிவும் இல்லை எனவும் அவற்றை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

Tuesday, March 10th, 2026 at 9:09 (SLT)

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக் கொண்டு வருவதற்குச் சற்று காலதாமதம் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது

Tuesday, March 10th, 2026 at 8:25 (SLT)

திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். CBS News செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, போர் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேசிய நிறுவனங்களை பாதுகாப்பதாக கூறிய தற்போதைய அரசாங்கம் இன்று மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது : சஜித் பிரேமதாச

Tuesday, March 10th, 2026 at 8:22 (SLT)

நமது நாட்டின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு மக்கள் விடுதலை முன்னனியின் நிலைப்பாடாக அமைந்து காணப்பட்டன. இன்று அரசாங்கம் இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவிப்புச் செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (09) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>