கத்தார், குவைத், எகிப்துக்கான தூதுவர்களை நியமித்து ஜனாதிபதி கூறிய முக்கிய விடயங்கள்

Tuesday, January 7th, 2025 at 13:01 (SLT)

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், புதிய நியமனங்களை பெற்ற இராஜதந்திரிகளிடம் இருந்து அவ்வாறானவற்றை எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க >>>

ஒவ்வொரு இலங்கையரும் 13 இலட்சம் ரூபா கடனாளி

Tuesday, January 7th, 2025 at 12:58 (SLT)

அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இது 6.47 வீத அதிகரிப்பாகும் என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

Tuesday, January 7th, 2025 at 7:52 (SLT)

2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

Tuesday, January 7th, 2025 at 7:45 (SLT)

கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 

Tuesday, January 7th, 2025 at 7:42 (SLT)

நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

யாழில் மீண்டும் சோதனைச் சாவடி : மக்கள் மத்தியில் அச்சம்

Tuesday, January 7th, 2025 at 7:35 (SLT)

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

வாள்வெட்டு குழுக்கள் மற்றும் மணல் மாபியாக்கள் என்பவற்றின் பின்னணியில் இயக்குவது தமிழ் அரசியல் தலைமைகளா?

Monday, January 6th, 2025 at 13:24 (SLT)

கடந்த இரு வாரங்களில் தாயகத்தில் அதிகம் பேசப்பட்ட இரு விடயங்கள் ஒன்று வாள்வெட்டு கும்பல்களின் அடாவடித்தனம் . மற்றொன்று சட்டவிரோத மணல் கடத்தல் . பட்டப் பகலில் வீதியில இறங்கி ஒரு நபரை வெட்டும் அளவிற்கு தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள் ? இதில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் வேறு இடம்பெற்றுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் மூழ்கியுள்ளனர். தனிமையில் செல்வதற்கே அஞ்சுகின்ற நிலைமை இன்று உருவாகியுள்ளது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று தங்களின் 10 ஆண்டு நிறைவை பொது இடத்தில் கேக் வெட்டி கொண்டாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வன்முறை கும்பலுக்கு இந்தளவிற்கு தைரியம் எவர் கொடுத்தார் ?

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

Monday, January 6th, 2025 at 8:26 (SLT)

அத்துருகிரிய – முல்லேகம பிரதேசத்தில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராமும் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தடம் புரண்ட ரயிலால் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு

Monday, January 6th, 2025 at 8:24 (SLT)

தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (05) இரவு, மருதானையிலிருந்து தெற்கு களுத்துறைக்கு நோக்கி பயணித்த ரயில் பின்னர் ரயில் முனையத்திற்கு சென்ற போதே இவ்வாறு தடம்புரண்டது.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கு குறுகிய நேர விஜயம் செய்த சீன வெளிவிவகார அமைச்சர்

Monday, January 6th, 2025 at 8:20 (SLT)

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஞாயிற்றுக்கிழமை நமீபியாவுக்குச் செல்லும் வழியில் இலங்கையில் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் அரசியல் பணியக உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யி, நமீபியாவுக்குச் செல்லும் வழியில் இலங்கையில் சிறிது நேரம் தங்கியிருந்துச் சென்றுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட கலந்துரையாடல்

Monday, January 6th, 2025 at 8:17 (SLT)

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளில் 60 இற்கும் அதிகமானோர் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சட்டமா அதிபருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

Monday, January 6th, 2025 at 8:12 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சட்டமா அதிபருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (6) இடம்பெறவுள்ளது. கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகளின் முன்னேற்றத்தன்மை குறித்து இச்சந்திப்பின் கலந்துரையாடப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும் வாசிக்க >>>

எந்தவொரு விசாரணை நடவடிக்கைகள் தவறான முறையிலோ அல்லது அரசியல் பழிவாங்களை மேற்கொள்ளும் நோக்கிலோ இடம்பெறாது : பதில் பொலிஸ் மா அதிபர்

Monday, January 6th, 2025 at 8:09 (SLT)

கடந்த வருடத்தில் செயற்பட்டதை விடவும் இந்த வருடம் அதிக வினைத்திறனுடன் செயல்பட நாம் எதிர்பார்த்துள்ளோம். அதேபோன்று கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்செயல்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.இந்த விசாரணைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தவறான முறையிலோ அல்லது அரசியல் பழிவாங்களை மேற்கொள்ளும் நோக்கிலோ இடம்பெறாது என பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

திரிபோஷ நிறுவனம் தொடர்பில் அரசின் முக்கிய தீர்மானம்

Sunday, January 5th, 2025 at 14:39 (SLT)

கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை இந்நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அரசு ஊழியர்களின் சம்பளம் இல்லாத விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

Sunday, January 5th, 2025 at 14:36 (SLT)

அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக, ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>