வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க அநுர அரசு நடவடிக்கை

Sunday, January 5th, 2025 at 14:33 (SLT)

வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஆண்டுக்கு 17,500 கோடி ஊதியம் நாளொன்றுக்கு 48 கோடி: உலகிலேயே அதிக ஊதியம் பெறும் நபர்

Sunday, January 5th, 2025 at 14:23 (SLT)

உலகிலேயே அதிக ஊதியம் பெறும் ஊழியர் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் நிறுவனம் QuantumScape. இது மின்சார கார்களுக்கான திட-நிலை ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் உலோக பேட்டரிகளை உருவாக்கும் நிறுவனமாகும்.

மேலும் வாசிக்க >>>

2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்

Sunday, January 5th, 2025 at 14:19 (SLT)

கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் நடந்த பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

துமிந்த சில்வாவுக்கு விசேட வசதிகள் வழங்கப்பட்டுள்ளனவா? புகைப்படங்கள் வெளியாகின

Sunday, January 5th, 2025 at 14:15 (SLT)

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட வசதிகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள சிறைச்சாலை திணைக்களம், துமிந்த சில்வா சிகிச்சை பெற்று வரும் விடுதியில் புகைப்படங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சுற்றுலா விசாவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டவருக்கு எதிராக நடவடிக்கை

Sunday, January 5th, 2025 at 14:11 (SLT)

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடின் தேசிய தொழிற்றுறையினர் பாதிக்கப்படுவார்கள். காலி மாவட்டத்தில் உக்ரேன், ரஷ்யா நாட்டு பிரஜைகள் முறையற்ற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என சிறு மற்றும் நடுத்தர சுற்றுலா கைத்தொழில் ஒன்றியத்தின் தலைவர் சமீர சேனக டி சில்வா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

விமான நிலையத்தில் சட்டவிரோதமான தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது

Sunday, January 5th, 2025 at 14:08 (SLT)

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அப்போது நான் மாணவன் இந்த அரசாங்கம் என்னை பொய்யான காணி வழக்கில் சிக்கவைக்க முயற்சி:யோஷித ராஜபக்ச

Saturday, January 4th, 2025 at 12:23 (SLT)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச, தான் பாடசாலை மாணவனாக இருந்த போது இடம்பெற்றதாக கூறப்படும் வழக்கு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அரசியல் சூனிய வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஒன்றரை வருடத்திற்கு முன் விகாரையில் திருடப்பட்ட வலம்புரிச் சங்கு கிணற்றிலிருந்து மீட்பு

Saturday, January 4th, 2025 at 12:17 (SLT)

சுமார் ஒன்றரை வருட காலத்திற்கு முன்னர் களுத்துறை, தொடங்கொடை,எலதுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து திருடப்பட்ட விலையுயர்ந்த வலம்புரிச் சங்கு ஒன்று அதே விகாரையில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பிரபாகரன் தப்பிப்பதற்கே மஹிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் மஹிந்த ராஜபக்ஷ : சரத் பொன்சேகா

Saturday, January 4th, 2025 at 12:16 (SLT)

யுத்த காலத்தில் கூட மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் காணப்படவில்லை. அவ்வாறிருகையில் தற்போது அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதில் எவ்வித சிக்கலும் இல்லை. பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே 2009இல் மஹிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஊர்காவற்துறை படகு திருத்தும் நிலையத்திற்கு அமைச்சர் சந்திரசேகர் கள விஜயம்

Saturday, January 4th, 2025 at 10:49 (SLT)

யாழ். ஊர்காவற்துறை பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை (03) விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் ஊர்காவற்துறை இறங்கு துறையை பார்வையிட்டதுடன் ஊர்காவற்துறையில் அமைந்துள்ள படகு திருத்தும் நிலையத்தையும் பார்வையிட்டனர்.

மேலும் வாசிக்க >>>

புதிய அரசமைப்பு தமிழரசுக் கட்சியைப் புறம்தள்ளி சிறிதரனுடன் பேச கஜேந்திரகுமார் முயற்சி கொழும்புக் கிளை அதிருப்தி

Saturday, January 4th, 2025 at 10:43 (SLT)

புதிய அரசமைப்பு விடயத்தில் தமிழரசுக் கட்சியைப் புறம்தள்ளி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது சிறிதரனுடன் பேச முற்படுவதற்கு தமிழரசுக் கட்சி இடமளிக்கக்கூடாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சி.இரத்தினவடிவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம் 

Saturday, January 4th, 2025 at 10:36 (SLT)

பொதுமக்களுக்கும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான உதிரி பாகங்களை பொருத்திய 12 பஸ்களின் சாரதிகளுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஆபத்தான பாகங்களை அகற்றுமாறு அட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் குறித்த பஸ் உரிமைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அதிகாலையில் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

Saturday, January 4th, 2025 at 10:33 (SLT)

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 பேரே இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் வரி வருமானம் 25 வீதம் அதிகரிப்பு : வெளியானது தகவல்

Saturday, January 4th, 2025 at 10:29 (SLT)

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் 1,958.08 பில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில் 1,565 மில்லியனிலிருந்துடன், 25.1 சதவீதம் வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது. வருமான வரி மற்றும் பெறுமதி சேர்ப்பு வரி மூலம் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலி சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

NPP யின் அர்ப்பணிப்பு, நடவடிக்கைகள் குறித்து IMF வியப்பு

Friday, January 3rd, 2025 at 12:16 (SLT)

சர்வதேச நாணய நிதியக் குழு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து வியப்படைந்ததாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். மேலும், வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை மூன்று மாதங்களில் மீட்டுள்ளோம் என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>