கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் : முச்சக்கரவண்டி சாரதி கைது

Thursday, December 19th, 2024 at 11:44 (SLT)

ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

கோப் குழுவின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

Thursday, December 19th, 2024 at 11:40 (SLT)

கோப் குழுவின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் கோப் குழுவின் தலைமைப் பதவியை ஆளும் தரப்புக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக காரணங்கள் உள்ளன. நிறுவன கட்டமைப்புகளை விசாரிக்க வேண்டியுள்ளது. அரச நிர்வாகத்துடன் குறித்த நிறுவனங்களின் தகவல்கள் வரும். இதன்படி அதனை முறையாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் கோப் குழுவின் தலைமைப் பதவியை ஆளும் கட்சி வைத்திருக்க தீர்மானித்துள்ளது. இது அனைவரும் கலந்துரையாடி எடுத்த முடிவாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதிலளித்தார்.

மேலும் வாசிக்க >>>

புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது

Thursday, December 19th, 2024 at 11:35 (SLT)

புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

Thursday, December 19th, 2024 at 11:30 (SLT)

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றன. இம் மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

வடக்கில் சில அரச அதிகாரிகளுக்கு ஏழைகளின் குரல் கேட்காத நிலைமை : ஆளுநர் வேதநாயகன் வேதனை

Thursday, December 19th, 2024 at 11:26 (SLT)

ஏழைகளின் குரல் சில அரச அதிகாரிகளுக்குக் கேட்காத நிலைமையே இப்போது இங்கு இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார்.

மேலும் வாசிக்க >>>

நடுவானில் விமானத்தில் பாலியல் வன்கொடுமை இலங்கையர் மீது குற்றம் குற்றச்சாட்டு

Thursday, December 19th, 2024 at 11:17 (SLT)

சர்வதேச விமானத்தில் அநாகரீகமான (பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இன்று (டிசம்பர் 19, 2024) பிராட்மெடோஸ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்குகள் தேவையற்றது : எலான் மஸ்க்

Thursday, December 19th, 2024 at 11:12 (SLT)

எக்ஸ் தளத்தின் நிறுவுனரான எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் ஷேக் டேக்குகள் தேவையில்லையென அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் ஹேஷ்டேக்குகள் தலைப்புகள் மற்றும் பதிவுகளை இலகுவாகத் தேடுவதற்கு ஒரு சாவியாகும்.

மேலும் வாசிக்க >>>

ஞானசாரருக்கு பிடியாணை

Thursday, December 19th, 2024 at 11:08 (SLT)

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு விசாரணை நிறைவு: தீர்ப்பு இம்மாதம் இறுதியில்

Thursday, December 19th, 2024 at 11:06 (SLT)

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தீர்ப்பு இம்மாதம் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாடசாலை மாணவர்களுக்கான மானியத் திட்டம்: கல்வி அமைச்சின் அறிவித்தல்

Thursday, December 19th, 2024 at 11:03 (SLT)

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்

Thursday, December 19th, 2024 at 11:00 (SLT)

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை

Wednesday, December 18th, 2024 at 12:58 (SLT)

படல்கும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னகட்டிய வாசிபான பிரதேசத்தில் வசிக்கும் 08 வயது 05 மாத சிறுமியை வன்புணர்வு செய்த 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை செவ்வாக்கிழமை (17) படல்கும்புர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தமிழர்களுக்காக நெஞ்சில் சூடு வாங்கவும் தயார் அர்ச்சுனாவின் பேச்சால் நாடாளுமன்றில் குழப்பம்

Wednesday, December 18th, 2024 at 12:54 (SLT)

வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ். போதனா வைத்தியசாலை பொறுப்புகளில் இருந்து அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மேலும் வாசிக்க >>>

கல்வி தகைமைகளை சபையில் முன்வைத்த சஜித் போலியென நிரூபித்தால் பதவி விலக தயார்

Wednesday, December 18th, 2024 at 12:51 (SLT)

தாம் முன்வைத்துள்ள கல்வித் தகைமைகள் போலியானவை என நிரூபித்தால், நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் பதவிகளில் இருந்தும் விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று சபையில் சமர்ப்பித்தார்.

மேலும் வாசிக்க >>>

புதிய சொகுசு வாகனங்கள் இறக்குமதி

Wednesday, December 18th, 2024 at 11:26 (SLT)

அரசாங்க ஒப்புதலைத் தொடர்ந்து சுற்றுலாத் துறைக்கான, புதிய வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>