உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் மீது நம்பிக்கை : பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

Friday, December 20th, 2024 at 11:46 (SLT)

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதன் மூலம் புதிய அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்திய கடற்றொழிலாளர்கள் எமது வளங்களை அபகரிக்க இடமளிக்க கூடாது : டக்ளஸ் தேவானந்தா

Friday, December 20th, 2024 at 11:42 (SLT)

எமது கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக இந்திய கடற்றொழிலாளர்கள் உள்நுழைந்து எமது வளங்களை அபகரிக்க ஒரு வினாடி கூட இடமளிக்க கூடாது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வாஸின் மரணத் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

Friday, December 20th, 2024 at 11:36 (SLT)

கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

“Clean Sri Lanka” தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்

Friday, December 20th, 2024 at 11:32 (SLT)

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் “Clean Sri Lanka” வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (19) வெளியிடப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் விளக்கம்

Friday, December 20th, 2024 at 11:29 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

Friday, December 20th, 2024 at 11:26 (SLT)

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு – மாளிகாகந்த துப்பாக்கிச் சூடு : இருவர் கைது

Friday, December 20th, 2024 at 11:21 (SLT)

கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

யாழ். வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றத்தில் ஒருவர் கைது

Friday, December 20th, 2024 at 11:18 (SLT)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். போதனா வைத்தியசாலை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர், நோயாளர் விடுதிக்குள் செல்ல முற்பட்ட நபரை வைத்தியசாலை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது, காவலாளிகளுடன் தர்க்கப்பட்டு, அவர்களில் ஒருவரை கடித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் : டக்ளஸ் தேவானந்தா

Friday, December 20th, 2024 at 11:15 (SLT)

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் முதியவர் உயிரிழப்பு

Friday, December 20th, 2024 at 11:11 (SLT)

கம்பஹா, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவெல்லேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

கானாவிலிருந்து இலங்கை வந்தவருக்கு மலேரியா

Friday, December 20th, 2024 at 11:08 (SLT)

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் நிமால் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும்

Friday, December 20th, 2024 at 11:04 (SLT)

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் நூற்றுக்கணக்காணோர் பாதிப்பு : ஆ.கேதீஸ்வரன்

Thursday, December 19th, 2024 at 11:57 (SLT)

யாழ் (Jaffna) மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் (A. Ketheeswaran) தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வாகன விபத்துகளால் நாளாந்தம் 8 பேர் உயிரிழப்பு

Thursday, December 19th, 2024 at 11:51 (SLT)

ஏனைய நோய்களுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டில் குடும்பத்தகராறு, உயரமான இடங்களில் இருந்து கீழே விழுதல் மற்றும் வாகன விபத்துகள் போன்ற அவசர சிகிச்சை வழங்கப்பட வேண்டிய விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு

Thursday, December 19th, 2024 at 11:47 (SLT)

புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தரணகஹவெவ பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (18) இரவு மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம , இஹலகுருகெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>