வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நான் யாரிடமும் பணம் பெறவில்லை : மனுஷ

Friday, November 29th, 2024 at 13:12 (SLT)

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பணம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. அதுதொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பயங்கரவாத இயக்கத்தையும் அதன் தலைவரையும் போற்றுவது முன்நோக்கிப் பயணிக்க உதவாது : அலி சப்ரி

Friday, November 29th, 2024 at 13:08 (SLT)

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக்கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் வாசிக்க >>>

திருகோணமலைக்கு சற்றுத்தொலைவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் இந்தியாவை நோக்கி நகருகின்றது

Friday, November 29th, 2024 at 8:59 (SLT)

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 290 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று இரவு 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த நிலையில், இது வடக்கு – வடமேற்குத் திசையையினூடாக தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் ரத்து?: அரசாங்கம் நடவடிக்கை

Friday, November 29th, 2024 at 8:54 (SLT)

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி: முந்தலம் பகுதியில் சம்பவம்

Friday, November 29th, 2024 at 8:50 (SLT)

மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். முந்தலம் – 412 ஏக்கர் பகுதியில் நேற்று (28) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார், இந்த விபத்தில் கணவன், மனைவி என தம்பதி உயிரிழந்தனர்.

மேலும் வாசிக்க >>>

பொதுமக்களுக்காக புதுப்பிக்கப்பட்ட இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

Thursday, November 28th, 2024 at 13:17 (SLT)

பொதுமக்களுக்கு உதவுவதற்கான முக்கிய அம்சங்களுக்கு இடமளிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமான www.police.lk, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நேற்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மனைவியின் வாயை வெட்டிய கணவன்

Thursday, November 28th, 2024 at 13:11 (SLT)

கணவனுக்கு எதிராக மனைவி செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போது, ​​கணவன், மனைவியின் கழுத்தையும் வாயையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம், மாவனல்ல பொலிஸில் கடந்த 26ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

Thursday, November 28th, 2024 at 8:18 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் புதன்கிழமை (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

திருகோணமலைக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம்

Thursday, November 28th, 2024 at 8:02 (SLT)

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

Wednesday, November 27th, 2024 at 13:33 (SLT)

நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக காவல்துறை தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

லண்டனில் இருந்து பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கைப்பை திருட்டு : சந்தேக நபர் கைது

Wednesday, November 27th, 2024 at 13:26 (SLT)

லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த அலுவலக உதவியாளர் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

2025 பட்ஜட் ஜனவரி 09 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Wednesday, November 27th, 2024 at 13:20 (SLT)

2025 நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேற்படி சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழ் – கண்டி நெடுஞ்சாலை ஓமந்தையில் வெள்ளத்தில் மூழ்கியது : போக்குவரத்து தடை

Wednesday, November 27th, 2024 at 13:15 (SLT)

யாழ்ப்பாணம் செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஒலுவில் பகுதியில் உடைந்து விழுந்த பாலம்

Wednesday, November 27th, 2024 at 13:12 (SLT)

அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சீரற்ற வானிலையால் 207,582 பேர் பாதிப்பு

Wednesday, November 27th, 2024 at 13:10 (SLT)

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும், குறித்த அனர்த்தத்தினால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>