மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குழுவினர் மன்னார் விஜயம்

Monday, December 2nd, 2024 at 9:59 (SLT)

மன்னாரில் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்து தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பு மையங்களில் தங்கி வாழும் மக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தலைமையில் வந்த குழுவினர் இம் மக்களை சந்தித்தித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஓயாமடுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை : சந்தேகநபர் கைது

Monday, December 2nd, 2024 at 9:51 (SLT)

ஓயாமடுவ – நவோதகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பண்டாரகம, பேமதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவு

Monday, December 2nd, 2024 at 9:47 (SLT)

கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரலாம் என சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.


இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Monday, December 2nd, 2024 at 9:40 (SLT)

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (02.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றமடைந்துள்ளோம் : பிரதமர் ஹரிணி அமரசூரிய

Monday, December 2nd, 2024 at 9:31 (SLT)

எயிட்ஸ் நோய் கண்டறியப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்த மனோபாவத்துடன் ஒப்பிடுகையில், இந்நோய் தொடர்பான சமூக மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றமடைந்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது

Sunday, December 1st, 2024 at 13:19 (SLT)

பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

வயல்வௌியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

Sunday, December 1st, 2024 at 9:30 (SLT)

ஹெட்டிபொல – வெடியேகெதர பிரதேசத்தில் வயல்வௌியில் நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

நெருக்கமானவர்களுக்கு உயர் பதவி : அநுர அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டு

Sunday, December 1st, 2024 at 9:28 (SLT)

ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்குத் தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி சொய்ஸா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்டாதீர்கள் : சிங்கள அரசியல்வாதிகளுக்கு அநுர அரசு தக்க பதிலடி

Sunday, December 1st, 2024 at 9:25 (SLT)

போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்துவது அடிப்படை மனித உரிமையாகும். அதனை எவரும் நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரித்து மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பெங்கால் சூறாவளி தமிழ்நாடு,புதுச்சேரியை தாக்கியது : நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறையும்

Sunday, December 1st, 2024 at 8:52 (SLT)

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த “பெங்கால் ” சூறாவளியானது நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களுக்கு இடையாக ஊடறுத்து உட்புகுந்துள்ளது. இது அடுத்துவரும் 3 மணித்தியாலங்களில் வலுவிழந்து மேற்கு – தென்மேற்குத் திசையினூடாக மெதுவாக நகர்ந்து செல்லும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ரேலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

Saturday, November 30th, 2024 at 8:55 (SLT)

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்படும்: கைத்தொழில் அமைச்சர் அறிவிப்பு

Saturday, November 30th, 2024 at 8:45 (SLT)

உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய அனைத்துப் பொருட்களில் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படமாட்டாது என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவை நோக்கி நகரும் சூறாவளி நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும்

Saturday, November 30th, 2024 at 8:42 (SLT)

பீன்ஜல் ( peinjal ) சூறாவளியானது திருகோணமலையிலிருந்து வடகாக சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது வடக்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் இன்று நண்பகல் வேளையில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களுக்கு இடையாக ஊடறுத்து செல்லக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட தம்பலகாமம் பாலம் போட்டாறு கிராமத்துக்கு அமைச்சர்கள் குழு ஒன்று கண்காணிப்பு விஜயம்

Saturday, November 30th, 2024 at 8:36 (SLT)

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட பாலம்போட்டாறு தி/விநாயகர் தமிழ் வித்தியாலயத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டு இடை தங்கல் முகாமில் உள்ள மக்களை வெள்ளிக்கிழமை (30) அமைச்சர்கள் கொண்ட குழுவினர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அனர்த்த கிராமிய மட்ட முன்னெடுப்புக்கள், நீர் வடிந்தோடக்கூடிய வழிவகைகள் தொடர்பிலும் இடைத் தங்கல் நிலையத்தில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பிலும் இதன் போது கேட்டறிந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க >>>

சஜித் தரப்புக்குள் ஏற்பட்ட பிளவு தனிவழி செல்ல தயாராகும் பங்காளிக் கட்சிகள்

Friday, November 29th, 2024 at 13:16 (SLT)

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் அக்கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>