மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் திருட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Sunday, November 24th, 2024 at 11:42 (SLT)

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் கைதான நபர்

Sunday, November 24th, 2024 at 11:30 (SLT)

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (23) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்த வருடத்தில் மாத்திரம் 497 இந்திய மீனவர்கள் கைது

Sunday, November 24th, 2024 at 8:37 (SLT)

இந்த வருடத்தில் நாட்டின் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய கருத்து வௌியிடுகையில், 66 மீன்பிடி படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அநுரவின் பிறந்த நாள் இன்று

Sunday, November 24th, 2024 at 8:33 (SLT)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 56 ஆவது ஜனன தினம் இன்றாகும்.இவர் இலங்கையின் 9-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் காணப்படுகிறார்.அநுர குமார திசாநாயக்க இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார். இவரது தந்தை ஒரு அலுவலக ஊழியர். இவருக்கு ஒரு சகோதரி உள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அதானி குழுமத்தின் மீதான அமெரிக்காவின் குற்றப் பத்திரிகைத் தாக்கல்: ரசியாவின் இந்திய ஆதரவுப் பின்னணி பற்றிய கேள்விகள்

Sunday, November 24th, 2024 at 8:24 (SLT)

அமெரிக்காவில் மோசடி செய்ததாக உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான கௌதம் அதானி மீது நியூயோர்க் சமஸ்டி நீதிமன்றத்தில் (Federal Court) கடந்த புதன்கிழமை அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கௌதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

விரைவில் சுகாதார அமைச்சர் யாழ் வருவார் : அமைச்சர் சந்திரசேகர் நம்பிக்கை

Saturday, November 23rd, 2024 at 22:45 (SLT)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆற்றில் வீழ்ந்த ஜீப், சகோதரர்கள் இருவரும் வண்டிக்குள் சிக்கிய நிலையில் பலி

Saturday, November 23rd, 2024 at 14:37 (SLT)

இன்று (23) குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குளியாப்பிட்டி ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் புஜ்கமுவ ஓயாவில் இந்த ஜீப் வண்டி வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

1996 வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்தானது

Saturday, November 23rd, 2024 at 14:04 (SLT)

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியின் கீழ் 1,888 வீடுகள் மற்றும் 108 மூத்த கலைஞர்களுக்கான வீடுகள் ஆகிய வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (22) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

மக்கள் காணும் கனவுகள் பொய்யாகிவிட கூடாது : ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

Saturday, November 23rd, 2024 at 14:02 (SLT)

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை தமிழர் கனடாவில் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை

Saturday, November 23rd, 2024 at 13:57 (SLT)

கனடாவின் – ஸ்காப்ரோ பகுதியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

Saturday, November 23rd, 2024 at 13:53 (SLT)

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

யாழில் சட்டத்தரணியின் வீட்டில் கோடிக்கணக்கான பணம் மாயம்: பணிப்பெண் உள்ளிட்ட இருவர் கைது

Saturday, November 23rd, 2024 at 13:50 (SLT)

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நாடே எதிர்ப்பார்க்கும் புதையல்

Saturday, November 23rd, 2024 at 11:36 (SLT)

வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினத்திலும் (23) முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு

Saturday, November 23rd, 2024 at 11:17 (SLT)

நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

உலகின் முதல் மர செயற்கைக் கோள்: 50 வருட திட்டத்தில் உருவானது

Saturday, November 23rd, 2024 at 11:06 (SLT)

உலகின் முதல் மர செயற்கைக் கோள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.இச் செயற்கைக் கோள் கடந்த செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

மேலும் வாசிக்க >>>