டிரம்பின் வெற்றியால் மத்திய கிழக்கில் பதற்றம்: இஸ்ரேல், ரஷ்யா மகிழ்ச்சி : ஆயுதங்களை தயார்ப்படுத்தும் ஈரான்

Thursday, November 7th, 2024 at 11:32 (SLT)

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதால் மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் அதிகரிக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

அநுரகுமாரவால் டிரம்புடன் இலகுவாக பணியாற்ற முடியும்: சரத் அமுனுகம

Thursday, November 7th, 2024 at 11:29 (SLT)

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனல்ட் டிரம்புடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவுக்கு இலகுவாக பணியாற்ற முடியும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவானதன் மூலம் ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஈரான், பலஸ்தீன, லெபனான் யுத்தங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நிதி வீண் விரயமாவதால் இந்த யுத்தங்களுக்கு செல்லும் அமெரிக்க நிதியை டிரம்ப் நிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கமளித்த அரசாங்கம்

Thursday, November 7th, 2024 at 11:24 (SLT)

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

Thursday, November 7th, 2024 at 11:19 (SLT)

அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தும் அல்லது தம்வசம் வைத்திருக்கும் ஆயுதங்கள், துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டு சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிளுக்கு அமைச்சர் விஜித ஹேரத் விடுத்த எச்சரிக்கை

Thursday, November 7th, 2024 at 11:17 (SLT)

அரசியல் அடிப்படையில் வெளிநாட்டு சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வடக்கில் பலமிழந்து வருகின்றது தமிழரசு : கம்மன்பில

Thursday, November 7th, 2024 at 11:12 (SLT)

வடக்கில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுடன் இணைந்து அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் வாசிக்க >>>

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு ஆதரவாக போராட்டம்

Thursday, November 7th, 2024 at 11:09 (SLT)

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக, பொது மக்களாலும் பொது அமைப்புகளாலும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் கனிய மணல் அகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் உள்ளிட்ட நால்வர் கைது

Thursday, November 7th, 2024 at 11:07 (SLT)

சுமார் ஒரு கிலோகிராம் எடையுள்ள 59 போதைப்பொருள் வில்லைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக வீதியில் மேற்கொண்ட சோதனையில் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Thursday, November 7th, 2024 at 11:04 (SLT)

நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் (07) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 27 ஆம் திகதி முதல் இன்று வரை வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8) முதல் தபால் நிலையங்களுக்கு சென்று அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் வாசிக்க >>>

Galle Face மைதானம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

Wednesday, November 6th, 2024 at 11:18 (SLT)

காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு

Wednesday, November 6th, 2024 at 11:14 (SLT)

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (06) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொலன்னறுவையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வர்த்தகர் உயிரிழப்பு

Wednesday, November 6th, 2024 at 11:10 (SLT)

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை, கத்துருவெல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு 

Wednesday, November 6th, 2024 at 11:06 (SLT)

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதேவேளை தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதிக்கு வந்த பதில் நீதிவான் தி.திருவருள் சட்டத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க >>>

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாடுகள் தளர்வு

Wednesday, November 6th, 2024 at 11:01 (SLT)

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன், புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இ.தொ.கா சிரேஷ்ட பிரமுகர் கட்சியிலிருந்து விலகல்

Wednesday, November 6th, 2024 at 10:57 (SLT)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.பிலிப்குமார் தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 37 வருடங்களாக கட்சியின் உறுப்பினராக இருந்த பிலிப்குமார் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் செயற்பட்டவர்.

மேலும் வாசிக்க >>>