பேக்கரி பொருட்களின் விலை குறித்த தீர்மானம்

Thursday, September 26th, 2024 at 10:39 (SLT)

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன், மனைவி பலி

Thursday, September 26th, 2024 at 10:35 (SLT)

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

Wednesday, September 25th, 2024 at 23:46 (SLT)

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

மேலும் வாசிக்க >>>

சனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவிப் பிரமாணத்தின் பின்னர் சனாதிபதி அலுவலகத்தில் தேசத்திற்கு ஆற்றிய உரை ஆற்றிய உரை

Wednesday, September 25th, 2024 at 22:11 (SLT)

சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களே, ஏனைய மத குருமார்களே, வெளிநாட்டு தூதுவர்களே, உயர்ஸ்தானிகர்களே, பிரதம நீதியரசரே, அழைப்பு விடுக்கப்பட்ட சிறப்பு அதிதிகளே, எமது நாட்டின் சனநாயகத்தின் மிக முக்கியமான பண்பு மக்களால் தம்மை ஆள்வதற்கான ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதே என்பது எங்களுக்கு தெரியும். எனினும் தோ்தலின்போது வாக்குகளை அளித்தல் மற்றும் ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதால் மாத்திரம் சனநாயகம் முற்றுப்பெற மாட்டாது. அது சனநாயகத்தின் ஓர் அடிப்படை அம்சமாக அமைந்த போதிலும் எமது நாட்டில் சனநாயகத்தை பலப்படுத்துவதற்காக கட்டமைப்புக்களின் பலம் பொருந்திய தன்மை அதைப்போலவே சட்டங்களின் பலம்வாய்ந்த தன்மை அவசியமென்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே நான் முதலில் எமது நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இந்நாட்டின் சனநாயகத்திற்காக எனது உச்சளவிலான அர்ப்பணிப்பினை எனது பதவிக்காலத்தில் வெளிக்காட்டுவேன். அதைப்போலவே எமது நாட்டில் தோ்தலொன்றின்போது, அதிகாரப் பரிமாற்றத்தின்போது அது சனநாயக ரீதியாக இடம் பெற்ற வரலாறு நிலவுகிறது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை சுங்கத்தின் விசேட அறிவிப்பு

Wednesday, September 25th, 2024 at 10:48 (SLT)

உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்து, சிலர் மோசடிகளில் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

18 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்: இரத்தம் சொட்ட மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

Wednesday, September 25th, 2024 at 10:44 (SLT)

கண்டி மாவட்டம் கலஹாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது குழந்தையை மூச்சுத்திணறடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான பெண்ணே தனது 18 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றும் ஜனாதிபதி

Wednesday, September 25th, 2024 at 10:40 (SLT)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மேலும் வாசிக்க >>>

ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய முக்கிய தலைவரை காணவில்லை: போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்

Wednesday, September 25th, 2024 at 10:36 (SLT)

காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய யாஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள்: ஒருவர் கைது

Wednesday, September 25th, 2024 at 10:31 (SLT)

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படை சியம்பலாண்டுவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே மொனராகலை, வெடிகும்புர பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாடாளுமன்றத்திற்கு அருகில் விபத்து: இராணுவத்திற்கு சொந்தமானது என தகவல்

Wednesday, September 25th, 2024 at 10:28 (SLT)

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் ரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வட மாகாண ஆளுனராகும் நாகலிங்கம் வேதநாயகன்: இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

Wednesday, September 25th, 2024 at 10:25 (SLT)

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

அனுரகுமாரவே இலங்கையின் கடைசி ஜனாதிபதி : சுனில் ஹந்துன்நெத்தி

Tuesday, September 24th, 2024 at 11:54 (SLT)

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் முன்னுரிமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதே என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுனில் ஹந்துன்நெத்தி இதனை கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கட்டுப்பணத்தை இழந்த ஜனாதிபதி வேட்பாளர்கள்

Tuesday, September 24th, 2024 at 11:49 (SLT)

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதான மூன்று வேட்பாளர்களை தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை இழந்தனர் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,

மேலும் வாசிக்க >>>

இலங்கை தொடர்பில் IMF வௌியிட்ட அறிவிப்பு

Tuesday, September 24th, 2024 at 11:44 (SLT)

இலங்கையில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும், கைதாகவுள்ள அரசியல் பிரபலங்கள்

Tuesday, September 24th, 2024 at 10:41 (SLT)

30 பேரின் பெயர்ப்பட்டியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் வாசிக்க >>>