புகையிரத வீதிகளைப் புனரமைப்பதற்கு 400 மில்லியன் டொலர் செலவாகும் : அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்

Tuesday, December 16th, 2025 at 9:36 (SLT)

மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பவற்றால் சேதமடைந்த புகையிரத வீதிகளை புனரமைப்பதற்கு 400 மில்லியன் டொலர் செலவாகக் கூடும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

Monday, December 15th, 2025 at 12:00 (SLT)

திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்கவும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க 354 பவுண் தங்கம்,77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் நூறு கோடிக்கும் அதிக பெறுமதியான பல்வேறு சொத்துக்கள் அரசுடமையாக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சிலாபம் கடல்பகுதியில் 1740 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை

Monday, December 15th, 2025 at 11:56 (SLT)

சிலாபம் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் கடந்த புதன்கிழமை (10) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து எழுநூற்று நாற்பது (1740) கிலோகிராம் பீடி இலைகளைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (10) மாலை சிலாபம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட ஐம்பத்தைந்து (55) பைகள் பரிசோதிக்கப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதியைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்

Monday, December 15th, 2025 at 11:52 (SLT)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியான Takafumi Kadonoக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

சிட்னி துப்பாக்கிச் சூடு இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை:பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

Monday, December 15th, 2025 at 11:49 (SLT)

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில் வேறுபாடு ஆலோசனை வழங்கத் தயாராக உள்ளோம் : நாமல்

Monday, December 15th, 2025 at 11:43 (SLT)

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடும் விடயங்களுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய அறுவர் கைது

Monday, December 15th, 2025 at 11:40 (SLT)

புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் அகழ்வு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் இருவர் துப்பாக்கியுடன் கைது

Monday, December 15th, 2025 at 11:36 (SLT)

மொட்டுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் பியகம பிரதேச சபை உறுப்பினர் பலட்டுவ விதானகே சுஜித் ஹர்ஷன மற்றும் தற்போது பதவியில் இருக்கும் உறுப்பினர் மத்தும லியனகே சுபாசன பிரபாத் ஆகியோரே சபுகஸ்கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

தந்தையை காப்பாற்ற சென்று உயிரிழந்த மகன்

Monday, December 15th, 2025 at 11:32 (SLT)

குருணாகல், மஹாவ – நாகொல்லாகம பிரதேசத்தில் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க பொருத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கிய தனது தந்தையைக் காப்பாற்றச் சென்ற 17 வயது மகன் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி 8 பேர் காயம்

Sunday, December 14th, 2025 at 11:03 (SLT)

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

பேரனர்த்த முகாமைத்துவத்திற்காக ஸ்டார்லிங்க் இணைய சேவை 100 அலகுகளை இலவசமாக வழங்குகிறது

Sunday, December 14th, 2025 at 10:56 (SLT)

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், நாட்டில் பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக இணைய சேவைக்கு 100 அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்த உதவும் எனவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மிகவும் திறம்பட மேற்கொள்ள உதவும் எனவும் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

சனிக்கிழமை (13) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இணையச் சேவைக்கான வன்பொருள் அலகுகள் ஏற்கனவே நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், அனர்த்த மீட்புப் பணிகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக அவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றி வளைப்பு : மூவர் கைது

Sunday, December 14th, 2025 at 10:53 (SLT)

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று (13) இரவு இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி

Sunday, December 14th, 2025 at 10:50 (SLT)

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Sunday, December 14th, 2025 at 10:47 (SLT)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரிப்பு

Sunday, December 14th, 2025 at 10:44 (SLT)

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 184 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>