போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் படகுடன் 5 பேர் கைது

Sunday, November 16th, 2025 at 7:29 (SLT)

கடந்த நாட்களில் திஸ்ஸமஹா­ராம, கிரிந்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகையை இலங்கைக் கடற்பகுதிக்குக் கடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பல்­நாள் மீன்பிடிப் படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வாசிக்க >>>

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்

Sunday, November 16th, 2025 at 7:26 (SLT)

தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் சந்தேகநபர் கைது

Saturday, November 15th, 2025 at 8:47 (SLT)

யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டடி – கண்ணாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 2 கிலோ 790 கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவாவும், 50 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் நிதிசார் சுதந்திரம் தொடர்பில் TISL கரிசனை

Saturday, November 15th, 2025 at 8:43 (SLT)

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் (PFMA) பிரிவு 21 இன் தாக்கம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) நிதி மற்றும் நிறுவனச் சுதந்திரத்தை சீர்குலைக்கிறது என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) கரிசனை தெரிவிக்கிறது.

மேலும் வாசிக்க >>>

இன்று நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ கன மழை

Saturday, November 15th, 2025 at 8:34 (SLT)

நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல்

Saturday, November 15th, 2025 at 8:31 (SLT)

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. வரவு செலவு சட்டமூலத்துடன் தொடர்புடைய குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவில் மீண்டும் வெடிப்பு : 7 பேர் பலி

Saturday, November 15th, 2025 at 8:29 (SLT)

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 3000 ஆயிரம் கிலோகிராம் வெடிப்பொருளின் ஒரு தொகுதி பொலிஸ் நிலையத்திற்குள் வெடித்து சிதறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டது பிபிசி: இழப்பீடு வழங்க மறுக்கிறது

Friday, November 14th, 2025 at 21:04 (SLT)

ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உரையின் சில பகுதிகளை வெட்டி ஒன்றாக்கி ஒளிபரப்பியது. இச்செயல் னாதிபதி டிரம்ப் வன்முறை நடவடிக்கைக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார் என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த ஊழலின் விளைவு பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்தித் தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் பதவி விலக வழிவகுத்தது.

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அறிவித்தது அமெரிக்கா

Friday, November 14th, 2025 at 21:00 (SLT)

போதைப் பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது.போதைப்பொருள் பயங்கரவாதிகளை குறிவைக்க அமெரிக்கா “சதர்ன் ஸ்பியர்” என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்குகிறது என்று பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை திருடிய ஹோட்டல் பணியாளர் கைது

Friday, November 14th, 2025 at 10:55 (SLT)

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பணப்பையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை திருடிய ஹோட்டல் பணியாளர் கோட்டை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

8 வயது சிறுமி துஷ்பிரயோக குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை

Thursday, November 13th, 2025 at 10:35 (SLT)

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கம் பௌத்த சமயத்தையும் கலாசார மரபுரிமையையும் புறக்கணிக்கிறது : சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

Thursday, November 13th, 2025 at 10:31 (SLT)

தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாசார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.

மேலும் வாசிக்க >>>

கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில்

Thursday, November 13th, 2025 at 10:28 (SLT)

கிரிந்த பகுதியில் பெருமளவான ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு

Thursday, November 13th, 2025 at 10:25 (SLT)

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் அதிகரிக்கும் தெருநாய்கள்

Thursday, November 13th, 2025 at 10:23 (SLT)

நாட்டில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாவதாக விலங்கு நலச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக பெருகி வருவதால் குறித்த சம்பவங்களும் அதிகரித்து பதிவாவதாக அந்த சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>