கஞ்சா பயிரிட ஆறு நிறுவனங்களுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித்த தேரர் தெரிவிப்பு

Monday, November 3rd, 2025 at 21:17 (SLT)

அரசாங்கம் ஆறு நிறுவனங்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி வழங்கி, அதற்காக 66 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளதாக ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.இது போதைப்பொருளுக்கு அடிமையாதல் மற்றும் கடத்தலைத் தடுக்க ‘ரட்ட எக்கட்ட’ (Ratama Ekata) எனும் திட்டம் ஆரம்பிக்கப்படடிருக்கும் வேளையில் நடந்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்று சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Monday, November 3rd, 2025 at 7:20 (SLT)

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வத்திக்கான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

Monday, November 3rd, 2025 at 7:17 (SLT)

திரு ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், இன்று (03) முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Monday, November 3rd, 2025 at 7:14 (SLT)

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும் வாசிக்க >>>

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து : 9 பேர் காயம்

Sunday, November 2nd, 2025 at 8:43 (SLT)

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்த பிரதமருக்கு அமோக வரவேற்பு

Sunday, November 2nd, 2025 at 7:03 (SLT)

நேற்று (01.11.2025) பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடிக்கு பிரதமரும் கல்வி அமைச்சருமான கெளரவ. கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் விஜயம் செய்த போது பாடசாலைச் சமூகத்தினரால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கான வாய்ப்பு

Sunday, November 2nd, 2025 at 6:55 (SLT)

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

களனி கங்கையில் மூழ்கிய இளம் பெண் பலி

Sunday, November 2nd, 2025 at 6:52 (SLT)

முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (1) மாலை பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில். சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது

Sunday, November 2nd, 2025 at 0:51 (SLT)

யாழ்ப்பாணத்தில் சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடற்கரையில் படகொன்றில் இருந்து கஞ்சா இறக்கப்பட்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , கஞ்சா போதைப்பொருளை படகில் இருந்து கரையில் இறக்கிக்கொண்டிருந்த மூவரை மடக்கி பிடித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் வரலாற்றிலேயே அதிக தாதியர்கள் ஆட்சேர்ப்பு : நளிந்த ஜயதிஸ்ஸ

Sunday, November 2nd, 2025 at 0:45 (SLT)

இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4,141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நிகழ்வு என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கூறுகிறார்.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்

Sunday, November 2nd, 2025 at 0:42 (SLT)

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்

Sunday, November 2nd, 2025 at 0:39 (SLT)

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் சென்றபோது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (3) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்தவர் கீழே விழுந்து உயிரிழப்பு

Saturday, November 1st, 2025 at 7:35 (SLT)

யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் நேற்று (31) உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியை சேர்ந்த சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் ஹெரோயினுடன் கைது

Saturday, November 1st, 2025 at 7:32 (SLT)

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) மொரடுவை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் காயப்படுத்திய குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், ஹெரோயினுடன் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கம்பஹாவில் கோர விபத்து : பாதசாரி ஒருவர் பலி

Saturday, November 1st, 2025 at 7:30 (SLT)

கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம்பொல வீதியில், கெஹெல்பத்தர சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>