தீர்வுக்காக எதுவும் செய்யாமல் இந்தியாவை எதிர்பார்ப்பது கையறு நிலையின் வெளிப்பாடு

September 5th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறி விட்டது என்று கூறுகின்றார் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். பேராசிரியர் சிற்றம்பலம் கல்விமானாக இதைக் கூறுகின்றார் என்பதிலும் பார்க்க அரசியல் வாதியாகப் பேசுகின்றார் என்பதே பொருத்தமானது. இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உப தலைவர். தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பிரதான பங்காளி என்பதால் பேராசிரியர் சிற்றம்பலத்தின் கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் கருத்தாகக் கொள்வதிலும் தவறேதும் இல்லை.

யுத்தம் முடிந்த பின்னராவது இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியா அக்கறை செலுத்தவில்லை என்பது பேராசிரியர் சிற்றம்பலம் வெளிப்படுத்திய மனக் குறை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பல தடவைகள் பரீட்சித்து தோல்வி கண்ட நிலைப்பாடு

September 4th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கோரிக்கைகளும் ஒருமித்தனவாகக் காணப்படுகின்ற நிலையில் இரு தரப்பினரும் ஏன் ஒன்றிணைய முடியாது?

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந் திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் இக்கேள் வியைக் கேட்டிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் நிருபமா ராவ் வைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசின. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்!

August 29th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (விக்கிலீக் தளத்தில் அந்த ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். உதாரணத்திற்கு சில: Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வைகோவை அதிரவைத்த கே.பியின் குண்டு

August 29th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கே. பி என்ற குமரன் பத்மநாதன் தூக்கிப் போட்ட ஒரு குண்டு வைகோவின் காலடியில் வெடித்திருக்கின்றது.

புலிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது யுத்தநிறுத்தம் ஏற்படுவதை வைகோ தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தடுத்துவிட்டார் என்று இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் கே. பி கூறியிருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

முக்காலமும் மூழ்கிக் குளித்தாலும் காகம் வெள்ளையாகுமா? சதா. ஜீ.

May 7th, 2010 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புலன் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் ‘நாடு கடந்த தமிழீழ அரசி’ன் நோக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று புலன் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் பணத்தை கொள்ளையடிப்பது. இரண்டு புலன் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் பணத்தை கொள்ளையடிப்பதுதான் அந்த இரண்டும். நாடுகடந்த அரசுக்கான தேர்தலுக்கே லொத்தர் குலுக்கியவர்கள், நாடு கடந்த அரசாங்கத்தை ‘ரன்’ பண்ணுவதற்கு எதைப்போட்டுக் குலுக்குவார்கள்? என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதி கட்சி முன்னிலை

April 9th, 2010 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், வியாழக்கிழமை நடந்த தேர்தலின்போது, வடக்கே போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என தேர்தல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அங்கு வாக்குப் பதிவு 50 சதத்துக்கும் குறைவாகவே இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நல்லொழுக்கத்தை மதிக்கும் நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும்: ஜனாதிபதி

March 21st, 2010 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப நல்லொழு க்கத்தை மதித்து நடக்கும் மக்கள் வாழும் நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் கண்டியில் தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டம் கண்டி கெட்டம்பே மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

திராவிடக் கட்சிகளை புறக்கணிக்கும் மாணவர் சக்தி

February 17th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

”மாணவ தலைமுறையே சூளுரை எடுத்து துள்ளி வா, இந்தியெனும் அரக்கன் தமிழ் மொழியை அழிக்க வருகிறான், ஆர்ப்பரித்து அலைகடலென திரண்டு வா உணர்ச்சி பொங்க, உள்ளத்தில் வேள்வி தீயை எரிய விட்டு உன்னதனமான பணிக்கு மன உந்துதலோடு வா” என்று தமிழகத்தில் அக்காலத்தில் விடுக்கப்பட்ட திராவிடக் கட்சிகளின் அழைப்புகளை யாரும் இன்னும் மறக்கவில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தெலுங்கானா போராட்டம் – ஒரு படிப்பினை

February 14th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இந்தியாவில் இப்போது தெலுங்கானா பிரச்சினை சூடு பிடிக்கின்றது. இந்தப் பிரச்சினையில் கே. சந்திரசேகர ராவ் இன்றைய கதாநாயகன்.

சென்ற வருடம் டிசம்பர் மாத முற்பகுதியில் சந்திரசேகர ராவ் ஆரம்பித்த உண்ணாவிரதத்துக்குப்பின் தெலுங்கானா பிரச்சினை கொதிநிலையை அடைந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்தியாவில் முடியாது? இலங்கையில் முடியும்!

February 11th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி மத்திய கபினற் அமைச்சராக இருக்கின்றார். இரசாயனத் துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சு தொடர்பான கேள்விகள் மக்களவையில் கேட்கப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றுக்குப் பதிலளிப்பதற்கு அமைச்சர் அழகிரி சபையில் இருப்பதில்லை என்று சொல்கின்றார்கள். உதவி அமைச்சரே கேள்விகளுக்குப் பதில் அளிப்பதோடு விளக்கங்களும் அளிக்கின்றார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மக்கள் ஏன் குழம்புகிறார்கள்?

February 9th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதில் உரை யாற்றிய பலரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் அம்மையாரும் ஒருவர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மலையக பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வது எப்படி?

February 8th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ’ என்ற பாரதியின் வரிகள் தான் மலையக அரசியல் தொழிற்சங்க நிலைப்பாடுகளை நினைக்கும் போது ஞாபகத்திற்கு வருகிறது.

போராடி பெற்றுக் கொண்ட வாக்குரிமையை கூறுபோட்டு பகிர்ந்து கொள்கின்ற பரிதாப நிலையையும், இருக்கும் பிரதிநிதித்துவங்களையும் இழந்து விடுகின்ற நிலையை எண்ணும் போது இந்த சரிவிலிருந்து விடுபடுவதற்கு உடனடியான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தன் அவசியத்தை உணர்த்துகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சுதந்திரத்தை முழுமைப்படுத்துவோம்

February 4th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இன்று சுதந்திரதினம். இலங்கை சுதந்திரம் பெற்று அறுபத்தொரு வருடங்கள் கழிந்துவிட்டன. எங்கள் சுதந்திரம் முழுமை பெற்றுவிட்டதென இப்போதும் கூற முடியாது.

அண்டை நாடான இந்தியாவைப் போலத் தீவிரமான சுத ந்திரப் போராட்டம் இலங்கையில் இடம்பெறவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கூடாகவே இலங்கை சுதந்திரம் பெற்றது. அதன் காரணமாக இருக்கலாம், நாங்கள் பெற்ற சுதந்திரம் முழுமையானதாக இருக்கவில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சம்பந்தருக்கு எச்சரிக்கை: ஈழநாதம் ஆசிரியர் தலையங்கம்

February 4th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடாத்திய ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் அங்கு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். அதில் முக்கியமானது பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படல்வேண்டுமென செய்தியாளர் கேட்டபோது சம்பந்தன் கீழ் வருமாறு பதிலளித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தலைவர்களுக்கு வெற்றி; மக்களுக்குத் தோல்வி

February 3rd, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பாரிய வெற்றி என்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் பெருமைப் படுகின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே சம்பந்தன் இக்கருத்தை வெளியிட்டார்.

சம்பந்தன் இப்போது கூட்டமைப்பின் சார்பில் பேசுகின்ற போதிலும் அவர் பாரம்பரியத் தமிழ்த் தலைமையின் ஒரு பிரதிநிதி. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் முக்கியமான உறுப்பினராக இருந்தவர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button