நுவரெலியவில் பேருந்து விபத்து : 20 பேர் காயம்

May 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நுவரெலியவில் (23.05.2025) மற்றுமொரு தனியார் பேருந்து விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மல்வெயர் வலையமைப்பை அகற்றும் யூரோப்போல்: 20 பேரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலகின் மிகவும் ஆபத்தான தீம்பொருள்கள் (Malware) சில இந்த வாரம் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையில் சீர்குலைக்கப்பட்டன. இதன் விளைவாக 20 கைது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய குற்ற எதிர்ப்பு அமைப்புகளான யூரோபோல் மற்றும் யூரோஜஸ்ட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பில் என்.பி.பி. ஆட்சியமைக்க பிரபா கணேசனின் கட்சி நேசக்கரம்

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயகத் தேசிய கூட்டணி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகச் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் பிரபா கணேசன் தலைமையில் பம்பலப்பிட்டி தலைமைக் காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை:ஹரிணி அமரசூரிய

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை : IMF அறிவிப்பு

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி, IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை தொடர்பாக IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தத்திற்கு இணைந்ததாக, IMF இன் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தங்க முலாம் துப்பாக்கி, துமிந்த கைது

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அமைச்சரும் , சுதந்திர கட்சி செயலாளருமான துமிந்த திசாநாயக்க கைது செய்யபட்டுள்ளார். தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

“சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்திறனுடன் இணைக்கின்ற நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான ” சஞ்சாரக உதாவ 2025″, இன்று (23) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை- உணவுகள் என்னை நோயாளியாக்குகின்றன: போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிரிட்டிஷ் பெண்

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளதுடன்,அந்த பெண்ணை சிறைச்சாலை விதிமுறைகளின் படி நடத்துவதாகவும் அவருக்கு விசேட சலுகைகள் எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிறுமியை பா லி ய ல் து ஷ் பி ர யோ கம் செய்த நபருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மேலும் பல பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) இடமாற்றங்களும் நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில், இதன்படி 12 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 4 பொலிஸ் பரிசோதகர்களுக்கு இவ்வாறு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்தார் டிரம்ப்

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன்படி, தற்போது குறித்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சர்வதேச நாடுகளின் மாணவர்கள் உடனடியாக வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் : பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ராஜித , கெஹெலிய, தயாசிறி உள்ளிட்ட 12 பேரின் வங்கிக்கணக்குகளை ஆராய அனுமதி : கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரபாகரனுக்கு சிலைவைப்பதாக நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை : இராமலிங்கம் சந்திரசேகர்

May 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஊழல்வாதிகளை சலவை செய்தா தேசிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்கிறார்கள் : இம்ரான் மஹரூப்

May 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மக்கள் சக்தியின் பெயரை ‘தேசிய சலவை சக்தி’ என்று மாற்றிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும். தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகள் மற்றும் மாற்றுக் கொள்கையுடையவர்களை இணைத்துக் கொள்ள போவதில்லை என்றார்கள். ஆனால் தற்போது பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். ஊழல்வாதிகளை சலவை செய்தா கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button