பாணந்துறை கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மாயம்

April 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பாணந்துறையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். பாணந்துறை மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சிலர் புதன்கிழமை (16) மாலை 5.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது ஐந்து பேர் கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து மாணவர்களை கொல்ல முயற்சி

April 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹைதராபாத் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

April 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதுடைய குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையான் – கம்மன்பில கூட்டணி அரசியல் சூழ்ச்சி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

April 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிள்ளையானின் வழக்கில் சட்டத்தரணியாக உதய கம்மன்பில ஆஜராகியுள்ளார். கம்மன்பில வழக்கில் வாதாடுவதை நாட்டு மக்கள் கண்டதில்லை. ஆனால், பிள்ளையான் அவரின் சட்டத்தரணியாக தெரிவு செய்திருக்கிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தீர்வை வரி குறித்து அமெரிக்காவுடன் பேச்சு அவசியம் : ரணில்

April 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி குறித்து விதிக்கப்பட்டுள்ள மூன்று மாத தடை நீங்கும் வரை காத்திருக்காமல், இதனை அவசர நிலைமையாக கருதி உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ் . வரும் ஜனாதிபதியிடம் வலி.வடக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

April 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அக்காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடலில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்களை காணவில்லை : ரஷ்ய தம்பதிகள் மீட்பு

April 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பானம பகுதி கடலில் நீந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடந்ததாக பானம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளனர் பிரதி அமைச்சர் எச்சரிக்கை

April 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சள் பொதிகளை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற 6 சந்தேக நபர்கள் கைது

April 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சள் பொதிகளை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற 6 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக 145 கிலோ உலர்ந்த மஞ்சளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழர்கள் தமக்கே ஆணை வழங்கியதாக அரசாங்கம் கூறுவதைப் பொய்யாக்கவேண்டும்: உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்குமாறு எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தல்

April 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் தமக்கே ஆணை வழங்கியதாக தேசிய மக்கள் சக்தியினால் கூறப்பட்டுவரும் நிலையில், அதனைப் பொய்யாக்கும் வகையில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் அமையவேண்டும். அதன்படி உதிரிக்கட்சிகளுக்கு வாக்களிப்பதை விடுத்து, சமஷ்டியை நீண்டகாலமாக வலியுறுத்திவரும் பிரதான தமிழ்த்தேசிய கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கே தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தவறான முடிவெடுத்து வயோதிபர் உயிரிழப்பு

April 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்த சம்பவம் பொலிகண்டி கிழக்கில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அரிபரநிதி (வயது-73) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

April 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

April 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், கடலில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது விரைவான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும், இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் (SLCG), அதன் செயல்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கமான ‘106’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகள் மீது வழக்குப் பதிவு

April 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையானை சந்திக்க ரணிலுக்கு அனுமதி மறுப்பு : கம்மன்பிலவுக்கு கிடைத்தது அனுமதி

April 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button