இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

April 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மலேசியாவில் இலங்கையரும், அவரது நாயும் உயிரிழப்பு

April 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மலேசியாவின் ஷா ஆலம், டமான் ஆலம் இண்டாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 27 வயதுடைய இலங்கை இளைஞர் என தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

28 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க ஆபரணங்களை அணிந்து வந்தவர்கள் கைது

April 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், இருவரும் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு இதுவரை இலங்கையின் எந்த அரசாங்கமும் 100 வீத ஆதரவை வழங்கவில்லை

April 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், அரசாங்கங்களிடம் இது தொடர்பாக அரசியல் உறுதிப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுர வியட்நாம் விஜயம்

April 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு’ என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் : பிரதமர்

April 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையானுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

April 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி

April 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்புத் துறை, அபிவிருத்தி நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்கான கலந்துரையாடல்

April 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை ஏற்பாடு செய்த சந்திப்பு வியாழக்கிழமை (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்ற கணவன்

April 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அளுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட நபர் குருந்துவத்த தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் : பிரதமர்

April 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈஸ்டர் தாக்குதல் இரகசியங்களை அம்பலப்படுத்திய பிள்ளையான் : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

April 11th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நியுயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் விழுந்து நொருங்கிய ஹெலிக்கொப்டர் : சிறுவர்கள் உட்பட ஆறு பேர் பலி

April 11th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவின் நியுயோர்க்கின் ஹட்சன் ஆற்றுப்பகுதியில் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மேர்வின் சில்வாவுக்கு ஏப்ரல் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்

April 10th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியார் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வரவு செலவுத் திட்ட யோசனைப்படி 30,000 பட்டதாரிகளை அரச துறையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை : சந்தன அபேரத்ன

April 10th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் பிரகாரம் 30,000 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர் என பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button