சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

February 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வைரஸானது மனிதர்களைப் பாதிக்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் ஒலிபரப்பில் முன்னோடியாக விளங்கிய ஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்

February 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழோசை ஆனந்தி’ என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை லண்டனில் காலமானார்.யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரான ஆனந்தி சூர்யப்பிரகாசம், இலங்கை வானொலியில் சனா அவர்களின் தயாரிப்பில் உருவான பல நாடகங்களில் நடித்துப்புகழ்பெற்றார். சமகாலத்தில் அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி

February 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கணேமுல்ல சஞ்சீவ கொலை : மேலும் மூவர் கைது

February 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் அத்தியவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு:சமல் சஞ்சீவ

February 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் தற்போது அத்தியவசிய மருந்துகள் உட்பட சுமார் 90 வகையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை கோரும் தீர்மானத்துடன் விஜித தலைமையிலான குழு இன்று ஜெனிவா செல்கிறது

February 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு இன்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஏன் ஆந்திர, கேரளா, பாகிஸ்தான் கடலுக்கு செல்வதில்லை இந்திய மீனவர்கள்:அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

February 23rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்படையால் தமிழக கைது செய்யப்படுவதை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டித்துள்ளார். இதற்கு இலங்கை கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பதிலளித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கூறுகையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரலில் இலங்கை வருகிறார் : சம்பூர் சூரிய மின் திட்டம் ஆரம்பிக்கப்படும்

February 23rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பரிசுத்த பாப்பரசர் ஆபத்தான நிலையில்

February 23rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சுவாசப்பாதிப்பு காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆபத்தான நிலையில் உள்ளார் என அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அஸ்;துமா போன்ற சுவாச பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசரின் நிலை தொடர்ந்தும் மோசமடைந்துவருகின்றதுஎன வத்திக்கான் தகவல்கள்தெரிவித்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரான்சில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் பலி : இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என ஜனாதிபதி தெரிவிப்பு

February 23rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரான்சின் முல்ஹவுஸ் நகரி;ல் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து பயங்கரவாத குற்றம் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் நேர்ந்த துயர சம்பவம் மனைவி பெற்ற கடனுக்காக கணவன் உயிர்மாய்ப்பு

February 23rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் உறவினர்கள் இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்திருந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் , தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை

February 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் , தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று மற்றும் நாளை சில ரயில் சேவைகள் ரத்து

February 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

களனிவெளி ரயில் பாதையில் இன்று (22) மற்றும் நாளை (23) இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடந்த அரசாங்கங்களுக்கு ஆதரவளித்துள்ளமையால் அந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும் : சுஜிவ சேனசிங்க

February 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கம் நாட்டில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் கடந்த கால அரசாங்கத்தை குறைகூறி தப்பிக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் கடந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்து வந்திருக்கிறது. அதனால் அந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜிவ சேனசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை அவதானத்துக்குரிய மட்டத்தில் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

February 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை அவதானத்துக்குரிய மட்டத்தில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button