அநுரவின் விஜயத்திற்கு முன் இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

December 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் மற்றும் பாதுகாக்கும் இலங்கையில் ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு இந்தியாவின் ஆதரவை வலியுறுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ள நிலையில், தமது கோரிக்கைகளை முன்வைத்து நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் சிறிதரன் ஒட்டோவா பயணம் : இந்தோ-பசுபிக் பிராந்திய பிரதியமைச்சருடன் முக்கிய சந்திப்பு

December 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக்குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் ஒட்டோவா நோக்கிப் பயணமாகியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவை தெரிவு செய்துள்ளமை சாதகமான விடயம் : இந்திய வெளிவிவகார பாதுகாப்பு ஆய்வாளர்

December 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இந்தியாவை தனதுமுதலாவது வெளிநாட்டு பயணத்திற்கு தெரிவு செய்துள்ளமை சாதகமான விடயம்.ஏனைய நாடுகளிற்கு செல்வதற்கு முன்னர் அவர் இந்தியாவை தெரிவு செய்துள்ளார். இது இந்தியா அவருக்கு முன்னுரிமைக்குரிய விடயம் என்பதை காண்பிக்கின்றது என புதுடில்லியை தளமாக வெளிவிவகார பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆய்வாளர் சிறிபதி நாரயணண் ஈடிவி பாரத்திற்கு தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சீதுவ பகுதியில் நபரொருவர் தாக்கப்பட்டு கொலை

December 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 02 வது ஒழுங்கை பகுதியில் நபர் ஒருவர், நேற்று சனிக்கிழமை (14) தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 47 வயதுடைய ஜூபிலி மாவத்தை, வைக்கால பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆவார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தெற்காசியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : பேச்சுக்களை மீள ஆரம்பிக்க சீனா தீர்மானம்

December 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயறபாடுகளை விரிவுப்படுத்துவது குறித்து சீனா ஆர்வம் செலுத்தியுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஸ்ரேல் சென்ற இலங்கையர்கள் குழுவை நாடு கடத்த தீர்மானம் 

December 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேலுக்கு தொழிலுக்காகச் சென்று தொழில் ஒப்பந்தத்தை மீறிய 17 இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்காக தொழில் விசாவில் இஸ்ரேலுக்கு வந்த இவர்கள், பணியிடங்களை விட்டு தப்பிச்சென்று பேக்கரிகளில் பணிபுரியும் போது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மீகொடயில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

December 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (14) காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து, அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆளும் கட்சியின் தகைமையை ஆராய தெரிவுக்குழு : பாராளுமன்றில் யோசனையை முன்வைக்க தீர்மானம்

December 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ள அசோக்க ரன்வலவின் ‘கலாநிதி பட்டம்’ தொடர்பில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர் கல்வி தகைமைகள் குறித்து ஆராய்வதற்கு புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போலி கல்வித் தகைமையுடன் ஆளும் தரப்பில் 07 உறுப்பினர்கள் அசோக்க ரன்வல பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும் : பொதுஜன பெரமுன

December 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

போலியான கல்வித் தகைமையை சமர்ப்பித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் 07 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு பதவிகளில் இருந்து விலக வேண்டும். கலாநிதி என்று குறிப்பிட்டுக்கொண்டு தேர்தலில் போட்டியிட்ட அசோக்க ரன்வல பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புகைப்படத்துடன் விடைபெற்ற மஹிந்தவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள்

December 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தமது கடமைகளை நிறைவுறுத்திக் கொண்டு வெளியேறியுள்ளனர். அதற்கமைய, நேற்றைய தினம் குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் இறுதி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அச்சுறுத்தி அடாவடித்தனம் செய்ய கடவுள் வந்தாலும் அனுமதி இல்லை : யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி

December 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

“என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை அபிவிருத்தி செய்வதற்கே வந்தோம் : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

December 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை ஊழலற்ற ஆட்சி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தலைமை உரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசியலமைப்புப் பேரவையும் ரணிலும்

December 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. நீதித்துறைச் செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் நீதித்துறையின் செற்பாடு சுயாதீனமாக இருக்க வேண்டும் எனவும் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கைகளில் கூறப்பட்டுமிருந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அநுரவின் ”மாற்றம்” சுயநிர்ணய உரிமைக்கு வழிவிடுமா?

December 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பல ஆண்டுகாலமாக “பரம்பரை அரசியல்” கலாசாரத்தைக் கையாண்டு இலங்கைத்தீவை வங்குரோத்து நிலைக்குத் தள்ள ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி வழிவகுத்தது என்ற உறுதியான கருத்து மேலோங்கியுள்ளது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிகளில் நாட்டு மக்கள் சரியான ஆட்சி முறையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு இருக்கவில்லை.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரிசியின் விலையில் வீழ்ச்சி

December 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button