சீதுவ பகுதியில் நபரொருவர் தாக்கப்பட்டு கொலை
சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 02 வது ஒழுங்கை பகுதியில் நபர் ஒருவர், நேற்று சனிக்கிழமை (14) தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 47 வயதுடைய ஜூபிலி மாவத்தை, வைக்கால பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது ,
கட்டிடம் ஒன்றின் நிர்மாண பணிக்காக வந்திருந்த கொத்தனார்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான, மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply