இலங்கை சிறார்களின் ஆபாச படங்கள் தொடர்பில் விசாரணை

December 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை சிறார்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் சிலர் வெளியிடுவதாக அமெரிக்க நிறுவனமான “நெக்மேக்” வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடிவேல் சுரேஷை வெளியேற்ற உத்தரவு

December 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகள்: சீனாவின் பெருந்தன்மைக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

December 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்

December 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணத்தில் திடீர் காய்ச்சல் காரணமாக மூவர் உயிரிழப்பு

December 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் திடீர் காய்ச்சல் காரணமாக மூவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உதயங்க வீரதுங்க – கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா பயணத்தடை : ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

December 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும் குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை : ரணில்

December 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மதுபான அனுமதிப்பத்திரங்கள் உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் வழங்கவில்லை எனவும், குறித்த அனுமதிப்பத்திரத்தால் அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு செலவு குறைவு மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுகின்றனர் : நளின் பண்டார

December 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நீர் மின் உற்பத்தியினுடாக 65 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் இலங்கை மின்சாரசபைக்கு செலவு குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தை குறைக்க முடியாது. இலங்கையின் மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மோசடி

December 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கைதான குற்றப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றில் ஆஜர்

December 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றவியல் விசாரணைப் முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பொலிஸ் களப்படை தலைமையகத்தில் வைத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரிசிக்கான அதிகப்பட்ச விலை நிர்ணயம் : வர்த்தமானி வௌியீடு

December 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக யாழ். பொலிஸில் முறைப்பாடு

December 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நடந்து கொண்டமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது

December 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

18 இலட்சத்திற்கு விற்பனை செய்யத் தயார் செய்யப்பட்ட இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

December 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை – தமிழ்நாடு கரைகளுக்கு அப்பாற்பட்ட தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாகன இறக்குமதி குறித்து அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

December 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் நேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எமது பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கலந்து கொண்டு வாகன இறக்குமதி தொடர்பில் எமது அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button