கைதான குற்றப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றில் ஆஜர்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றவியல் விசாரணைப் முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பொலிஸ் களப்படை தலைமையகத்தில் வைத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கைது செய்யப்பட்ட நெவில் சில்வா இன்று (10) இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply