கவனயீனத்தால் நடந்த துயரம் அமெரிக்கா செல்லவிருந்த இளைஞன் சாவு

December 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புத்தளம் – சிலாபம், வட்டக்கல்லிய ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபம் வட்டக்கல்லிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தினுக ஷஷேந்திர பெரேரா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆப்பிரிக்காவில் அமைதி காக்க செல்லும் இலங்கை இராணுவம்

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் படையின் 108 பேர் கொண்ட குழு ஒன்று மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படையின் உறுப்பினர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் பங்களிப்பு செய்து வருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தப்பியோடிய அதிபருக்கு அடைக்கலம் கொடுத்த ரஷ்யா

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டைவிட்டு தப்பியோடிய சிரிய அதிபர் பஷார் அல்-அசாதுக்கு அடைக்கலம் வழங்கியிருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. தலைநகர் டமாஸ்கஸிலிருந்து தப்பிச் சென்ற அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆதரிப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியது. அசாதின் ஆட்சியின்போது சிரியாவின் முக்கிய நட்பு நாடாக ரஷ்யா இருந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசாங்கம் மக்கள் ஆணையை புறக்கணித்து ரணிலின் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டையே முன்னெடுக்கிறது : சஜித்

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பெரும் மக்கள் ஆணையையும், கூடிய ஆசனங்களையும் பெற்று, பாராளுமன்ற வரத்தைப் பெற்றுக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு குறித்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் முன்னெடுத்து வரப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பொடி லெசி” யின் சிறைக் கூண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் மீட்பு

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறைக் கூண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மலசல கூட குழி நிர்மாணத்தின்போது தவறி விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றில் மலசல கூட குழி நிர்மாணப் பணியின்போது தவறி விழுந்து குடும்பஸ்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்தார். மலசல கூட குழி நிர்மாண வேலைகளில் இருவர் ஈடுபட்டிருந்தவேளை, அந்த இருவரும் தவறி விழுந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆவா குழுவின் தலைவர் கனடாவில் கைது நாடு கடத்துமாறு பிரான்ஸ் வேண்டுகோள்

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் குழுவான ஆவாவின் தலைவர் என கருதப்படும் பிரசன்னா நாகலிங்கம் கொலை குற்றச்சாட்டு மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரான்சிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கின்றார். இலங்கையிலிருந்து பிரான்சிலிருந்தும் தப்பியோடிய பின்னர் அவர் இந்த வருடம் கனடாவில் கைதுசெய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அநுராதபுரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அநுராதபுரம், இப்பலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலவ்வேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடவுச்சீட்டுப் பணிகளை விரைவுபடுத்த மேலதிக நேரச் சேவையில் ஈடுபடும் அதிகாரிகள்

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, குறித்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழக கடற்கரையை அண்மித்து டிசம்பர் 11 ஆம் திகதியளவில் அடைய வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தின் கீழ், டிசம்பர் 10 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று முதல் கடற்படையினர் 2,138 பேருக்கு பதவி உயர்வுகள்

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்படையின் 74 வது ஆண்டு நிறைவு விழா இன்று (09) பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில் 2,138 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கு இன்று முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

AddThis Social Bookmark Button

1 கிலோ அரிசியின் மொத்த விலை 225/=

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த 10 நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் வெளியேற்றப்படும் அதிகாரிகள்

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள 38 அமைச்சின் திட்ட அலுவலகங்களில் பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று பொது நிர்வாக அமைச்சுக்கு நியமிக்கப்பட்டு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட உயர் அதிகாரிகளில் 38 திட்ட அலுவலகங்களின் தலைமை இயக்குனர்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய மாணவன் கனடாவில் சுட்டுக் கொலை

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடாவின் எட்மண்டனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாவற்காடு வயல் பகுதியில் தேங்கி நிற்கும் வெள்ள நீர் : இந்த வருடத்துடன் தீர்வு வழங்குவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி

December 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ். தென்மராட்சி – வரணி, நாவற்காடு வயல் வெளிப் பகுதியில், வெள்ள நீர் தேங்கி நிற்பதை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்த வருடத்துடன் தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்ததுடன் விவாசாயிகளுடன் கலந்துரையாடினார். யாழ்.தென்மராட்சி வரணி நாவற்காடு வயல் பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்பதால் நெற்பயிர்ச் செய்கை முற்றாக அழிவடையும் அபாயத்தில் இருப்பதாகவும் தொண்டைமனாறு தடுப்பணையின் வான் கதவுகளை திறந்து விடுமாறு கோரி அப்பகுதி விவசாயிகள் கடந்த 5ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button