அநுராதபுரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம், இப்பலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலவ்வேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.

வலவ்வேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கடந்த சனிக்கிழமை (07) இரவு தனது வீட்டில் மற்றுமொரு நபருடன் இணைந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply