கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : செல்வம் எம். பி இடையே விசேட சந்திப்பு

December 6th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட வரைவு மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வார இறுதியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேங்காய் விலை 230 ரூபாவாக அதிகரிப்பு

December 6th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேங்காய் விலையை 220 முதல் 230 ரூபா வரையில் வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய விலைக்கே விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பயங்கரவாத தடைச் சட்டமூலமும்: வழிதவறும் அரசாங்கமும்

December 6th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு அதிகளவில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம், போராடுவதற்கான சுதந்திரம் போன்றவை இதனால் முடக்கப்பட்டு வருகின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பல்லாயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு

December 6th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் கடலோர நகரமான ஃபெர்ண்டேலில் இருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

December 6th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல : அரசாங்கம் சுட்டிக்காட்டு

December 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காரணமல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக பலர் கூறுவதாக இராஜாங்க அமைச்சர் சத்துரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் அது தவறானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க ஆலை உரிமையாளர்கள் இணக்கம்

December 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கட்டுப்பாட்டு விலையில், ‘லங்கா சதொச’ மூலம் தினமும் 200,000 கிலோகிராம் அரிசியை சந்தைக்கு வழங்க அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நேற்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போது வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ( Wasantha Samarasinghe) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மீளமைக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை

December 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) கொழும்புக் கிளை நேற்று (04) மீளமைக்கப்பட்டுள்ளது. இதன்போது கொழும்புக் கிளையின் முன்னாள் செயலாளர் சி.இரத்தினவடிவேல் தலைவராகவும், மலர்விழி சிங்காரநாதன் செயலாளராகவும், முத்துக்குமாரசாமி பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

IMF உடன்படிக்கை திருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு 

December 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவி

December 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மறு அறிவித்தல்வரை எந்தவொரு கலால் உரிமத்தையும் வழங்க வேண்டாம் ஜனாதிபதி அதிரடி உத்தரவு

December 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மறு அறிவித்தல் வரை எந்தவொரு கலால் உரிமத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலால் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி: கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் எச்சரிக்கை

December 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம் பெற்று வருவதாகவும், அவ்வாறு பொய்கூறி வருபவர்களை நம்ப வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நபர் ஒருவரால் தாக்கப்பட்டதில் இளம் பெண் உயிரிழப்பு

December 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நபர் ஒருவரால் தாக்கப்பட்டதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிபாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவல பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: ஜனாதிபதி வெளிப்படுத்திய தகவல்

December 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலைச் செய்ய முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து அதனை செயற்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விரும்பம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இதனை தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய ஹாக்கியின் சரித்திர வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தி 5 முறை சாம்பியன் பட்டம்

December 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியா தனது பிரபலமான விளையாட்டுத் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளது. ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button