தென்கொரியா, இத்தாலி ,நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண் கைது

November 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தென்கொரியா, இத்தாலி மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கம்பஹா பிரதேசத்தில் கைது வைத்து செய்துள்ளனர்.

சந்தேகநபரான இந்தப் பெண் இவ்வாறு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள ஆண்களை ஏமாற்றி 50 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

எனினும், குறித்த பெண் உறுதியளித்தபடி வேலைவாய்ப்பை வழங்கவில்லை என விசேட விசாரணைப் பிரிவுக்கு 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி, அதிகாரியர்கள் சந்தேகநபரை கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றபோதிலும், அவர் அதிகாரிகளைத் தவிர்த்து வந்துள்ளார்.

நேற்று (06) கம்பஹா பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இஸ்ரேலுக்கான வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக நேர்காணல் நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், உரிய அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைக்காக ஆட்களைச் சேர்த்தல் மற்றும் பணம் அறவிடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் கொட்டாவை, பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் வேறு பொலிஸ் நிலையங்களிலும் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் நிலுவையில் உள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

AddThis Social Bookmark Button

2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு : செலவுத் திட்டம் 

November 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 7, 2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, விசேட உரையாற்றவுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது

November 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தீடீர் சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

​நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

November 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தை விற்பனை: தாய்-தந்தை உள்பட 6 பேர் கைது

November 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சென்னையை சேர்ந்தவர் ஸ்ரீஜி (வயது 27), பெயிண்டர். இவரது மனைவி வினிஷா (23). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த மே மாதம் 4-வதாக வினிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக அந்த குழந்தையை வளர்க்க முடியாமல் தவித்த ஸ்ரீஜி-வினிதா தம்பதியினர், 3 மாதமே ஆன அந்த பெண் குழந்தையை விற்க முடிவு செய்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கேரளாவில் அதிகரிக்கும் அச்சம் மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி

November 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்றில் இந்த ஆண்டில் இதுவரை , கேரளாவில் 160 பேர் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 37 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் கேரளாவில் கடந்த 5 நாட்களில் 4 பேர் மூளையை தின்னும் அமீபா தொற்றில் உயரிழந்துள்ளது , பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற திட்டம் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பட்ஜட்டில் எதிர்பார்க்கின்றோம் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

November 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கவே சுமார் 2000 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் மேலும் 5000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாககிக் கொண்டிருக்கின்றனர். எனவே இவ்வாறு ஆயிரக்கணக்கில் வைத்தியர்கள் மருத்துவ சேவையிலிருந்து நீக்குவதைத் தவிர்ப்பதற்கும், சுகாதாரத்துறையிலுள்ள ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் 2026 வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஏறாவூரில் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் ஜஸ் போதை பொருளுடன் கைது

November 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டு ஏறாவூரில் இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வீடு வந்து மீண்டும் கடமைக்கு திரும்பாது இரண்டு வருடமாக தலைமறைவாகி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் ஒருவரை ஏறாவூரில் 5 கிராம் 410 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் புதன்கிழமை (05) கைது செய்துள்ளதுடன் இராணுவ சீருடை ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடந்த பட்ஜெட்டைப் போலவே, இந்த முறையும் நிறைய சலுகைகளை வழங்குவோம்

November 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்காலத்தில் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். கடந்த பட்ஜெட்டில், அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தல், குழந்தைகள் பள்ளி உபகரணங்கள் வாங்குவதற்கான கொடுப்பனவை வழங்குதல், வசதிகளை அதிகரித்தல் போன்ற பல சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடலில் மூழ்கி இளைஞன் மாயம்

November 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகக் கந்தர பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை

November 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை, நாளை (07) இடம்பெற உள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை மாலை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்க உள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

November 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

November 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

துப்பாக்கி மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருளுடன் முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 21 சாரதிகள் கைது

November 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 21 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடிப்பது எமது தேவை இல்லை, எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே : இரா. சாணக்கியன்

November 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத் தேவையில்லை. எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே. இதுவே எமது ஒரே கோரிக்கை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button