ஜேர்மன் பிரஜாவுரிமையுடைய நபர் இலங்கையில் கைது

மட்டக்களப்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மத்திய வீதியில் வசிக்கும் ஜேர்மன் பிரஜாவுரிமையுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்கும் குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் விடுதலைப்புலிகளை மீண்டும் கட்டியெழுப்புதல், வெளிநாடுகளிலிருந்து உண்டியல் மூலம் பணப்பரிமாற்றம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது.

அவரது கைது தொடர்பில் எழுத்து மூலம் உரிய நபருக்கு தகவல் வழங்கிய பின்னரே பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply