கொரோனா வைரஸ் தாக்குதல்: ஈரானில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன், பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், 90 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் இந்த நோயால் நேற்று வரை 92 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்று மேலும் 15 பேர் பலியாகினர். இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply