அமெரிக்காவில் ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று : கொரோனா அப்டேட்ஸ்

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 44 லட்சத்து 14 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 44 லட்சத்து 14 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 52 லட்சத்து 3 ஆயிரத்து 313 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 910 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 86 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 38,33,017
பிரேசில் – 20,75,124
இந்தியா – 10,38,716
ரஷியா – 7,65,437
தென் ஆப்பிரிக்கா – 3,50,879
பெரு – 3,49,500
மெக்சிகோ – 3,31,298
சிலி – 3,28,846
ஸ்பெயின் – 3,07,335
இங்கிலாந்து – 2,94,066
ஈரான் – 2,71,606
பாகிஸ்தான் – 2,61,916
சவுதி அரேபியா – 2,48,416
இத்தாலி – 2,44,216
துருக்கி – 2,18,717
ஜெர்மனி – 2,02,572
வங்காளதேசம் – 2,02,066

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply