நேற்றிரவு திருகோணமலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம்

திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு திருகோணமலை , இலுப்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காயமடைந்தவர் நிலாவெளி – இலுப்பைக்குளம் எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஆர். கிருஷாந்தன் என தெரியவருகின்றது.
ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு செல்லும்போது வழியில் மதுபோதையில் வந்த இருவர் கோடாரியால் குறித்த நபரை தாக்கியுள்ளனர்.
இதனால் தலையில் காயம் ஏற்பட்ட அவர் 1990 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகைச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மோதல் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply