பல்லம களுகெலே பிரதேசத்தில் தந்தையைக் கொலைசெய்த மகன்!

பல்லம களுகெலே பிரதேசத்தில் வீடொன்றில் மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு வலுவடைந்ததால் மகனால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply