இலங்கையில் ஆபத்தான மற்றுமொரு தொற்று நோய்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் “லீஷ்மேனியாசிஸ்” எனும் ஆபத்தான நோய்த்தொற்று பரவி வருகிறது.இத்தொற்றுக்கு ஆளான நோயாளிகள் அநுராதபுர மாவட்டத்திலுள்ள பதவியா, நாச்சதுவா, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம மற்றும் இபலோகம பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளனர்.
லீஷ்மேனியாசிஸ் என்பது உலகின் 9ஆவது மிக ஆபத்தான தொற்று நோயாகும். 97 நாடுகளில் இத்தொற்று நோய் பரவியுள்ளது எனக்கூறப்படுகிறது.
இந்த நோய் மணல் பூச்சி மூலம் பரவுவதாக கூறப்படுகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவரை மணற்பூச்சி கடித்துவிட்டு, ஆரோக்கியமான இன்னொருவரை அது கடிக்கும்போது இந்த நோய் எளிதாகப் பரவுகிறது.
இதுவரை நாட்டில் சுமார் 500 நோயாளிகளுக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், லீஷ்மேனியாசிஸ் பரவுவது குறித்த விழிப்புணர்வு திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாகாண சுகாதார பயிற்சிப் பிரிவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply