இன்று பிற்பகல் பிரச்சாரம் தொடங்குகிறார் கமல் ஹாசன் : 4 இடங்களில் பேசுகிறார்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் “தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்கிற கோஷத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.
“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் இன்று முதல் கமல் ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடையும் கமல் ஹாசன், மதுரையில் இருந்து இன்று பிற்பகல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இன்று 4 இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பேச உள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இதைத் தொடர்ந்து, நாளை காலை மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திறந்த வேனில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திறந்த வேனிலேயே செல்லும் கமல்ஹாசன் குறிப்பிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்களில் மக்கள் மத்தியில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15-ம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும், 16-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும் கமல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கமல் வருகையையொட்டி மக்கள் நிதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்னர். பிரச்சாரத்திற்காக விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply