இலங்கை சீன காலனி, மாற்றம் வர மக்கள் மாற வேண்டும் : சந்திரிக்கா தெரிவிப்பு

அரச நிறுவனங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படுவதை எதிர்த்த மக்கள், தற்போது எல்லாவற்றையும் சீனாவிடம் ஒப்படைத்துள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டினார்.
மறைந்த விஜயகுமாரதுங்கவின் 33ஆவது நினைவுதின நிகழ்வு சீதுவயில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுச் சிலைக்கு அருகில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி, விஜயகுமாரதுங்கவின் நினைவுச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தற்போது முழுமையாக சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் தனக்கு சீனாவுக்கு எதிராக எதுவும் இல்லை என்று தெரிவித்த சந்திரிகா குமாரதுங்க, ஆனால் தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்தையும் அழித்துவிட்டது என குற்றம் சாட்டினார்.
நாட்டை முன்னேற்ற வேண்டுமானால் நாட்டு மக்கள் மாற வேண்டும் எனவும் அதற்கு கல்வித் துறை மறுசீரமைப்பு அவசியம் எனவும் சந்திரிக்கா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply