மவுரிசியஸ் நாட்டிற்கு சென்றடைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு நாட்டின் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் விடுத்த அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக மாலத்தீவிற்கு சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா சார்பில் ஒரு லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை மாலத்தீவுக்கு வழங்கினார்.
மேலும் மாலத்தீவு ராணுவ மந்திரி மரிய திதியை சந்தித்து பேசிய அவர், இந்தியா-மாலத்தீவு இடையில் ரூ.362 கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மவுரீசியஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு மவுரீசியஸ் வெளியுறவுதுத்துறை அமைச்சர் ஆலன் கனூ அவரை வரவேற்றார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், மவுரீசியஸ் நாட்டில் தான் மேற்கொண்டிருக்கும் சுற்றுப்பயணம் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply