எங்களிடையே உள்ள ஒரே பிரச்சினை, காஷ்மீர் தான் : இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு சென்றுள்ளார். நேற்று இலங்கை-பாகிஸ்தான் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு நான் பிரதமராக பதவி ஏற்றவுடன், காஷ்மீர் பிரச்சினை குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் பதில் வரவில்லை.

எங்களிடையே உள்ள ஒரே பிரச்சினை, காஷ்மீர் தான். அதை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். என்றாவது நல்ல வழி பிறக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply