நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு, புற்றுநோய் மருந்து இல்லை, உபகரணங்கள் குறைப்பாடு
நாட்டில் வைத்தியசாலைகளில் புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்திய உபகரணங்கள் இல்லை எனவும் முன்னாள் சுகாதார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
தமது ஆட்சி காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படவில்லை எனக் கூறிய அவர், தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து ஊடகங்கள் கதைப்பதில்லை எனவும் கூறினார்.
அத்துடன் தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை அவசியமான நேரத்தில் கொள்வனவு செய்யத்தவறியமை காரணமாக பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2021 வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போதும், ஆறு மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற கொரோனா தொற்று தொடர்பான விவாதத்தின் போதும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறினார்.
ஆனால் தற்போது கொள்வனவு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை சனத்தொகையுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
மேலும் தடுப்பூசி விநியோகத்தின்போது அரசாங்கம் தனது ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply