முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காரை நிறுத்தியதற்கு ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் வெடிபொருட்களுடன் மர்ம கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அதிலிருந்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவிக்கு எழுதப்பட்டு இருந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதமும் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது. மேலும் எந்த அமைப்பும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்கவில்லை.

இந்நிலையில், முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் காரை நிறுத்தியதற்கு ஜெய்ஷ்- உல்- ஹிந்த் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெலிகிராம் சமூக வலைதளத்தில் அந்த அமைப்பு முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் காரை நிறுத்திய சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்ளது. இது சமூக வலைதளத்தில் பரவிய போது போலீசாரின் கவனத்திற்கு வந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply