தலையில்லா சடலம் 30 வயது பெண், கொலை செய்த பொலிஸ் எஸ்ஐ தற்கொலை
கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் குருவிட்டை – தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலத்தின் தலைப்பகுதி இல்லாதமையால், மரபணு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான, விடுமுறையிலிருந்த புத்தல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டரே அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித ரோஹன கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply