நல்லடக்கத்திற்கு இரணைதீவு மக்கள் எதிர்ப்பு

கொவிட் 19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த தீர்மானத்தை வர்த்தமானி அறிவிப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது. இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிப்பு நிறைவடைந்துள்ளது.

கொரோனா உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக பொருத்தமான பல இடங்களை பரிசீலித்து இரணைதீவுவை தேர்த்தேடுத்துள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா மரணங்களை இரணைதீவில் அடக்கம் செய்யவேண்டாம் என வேண்டுகோள் விடுத்து அங்குள்ள மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை தங்கள் தீவில் அடக்கம் செய்வது தீவுவாசிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். அதன்படி, கொரோனா உடல்களை அடக்கம் செய்ய மற்றொரு இடத்தை தேர்ந்தெடுக்குமாறு அதிகாரிகளிடம் அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply