ஓமனில், கொரோனாவுக்கு 3 பேர் பலி

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 358 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 527 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 193 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக நேற்று 3 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,583 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உடல்நலக்குறைவால் 77 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply