தற்கொலை செய்துகொண்ட கொரோனா தொற்றாளர்

கொரோனா தொற்றாளர் ஒருவர் புகையிரதத்திற்கு முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மன்னார் – சாந்திபுரம் கிராமத்தை சேர்ந்த 58 வயதுடைய ஆண் ஒருவர் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு நிலையில், நேற்று (06) குறித்த சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply