வரம்புகளை மீறியதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரஷ்யா

ரஷ்யாவின் கீழ் சபை நாடாளுமன்ற சபாநாயகர் வியாசெஸ்லாவ் வொலோடின். புதினின் ‘யுனைட்டட் ரஷ்யா’ கட்சியின் உறுப்பினரான இவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேஸ்புக் குறித்து ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் ரஷ்யாவின் மின்னணு ஒற்றுமையை பேஸ்புக் நிறுவனம் குலைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய நீதிமன்றம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ரஷ்ய சட்டத்திற்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக சமூக வலைதளங்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டால் அவற்றை தடை செய்யவும் அபராதம் விதிக்கவும் ரஷ்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்திருந்தது.

உக்ரைன் நாட்டில் செயல்பட்டுவரும் வலதுசாரி ஆதரவாளர்கள்மீது முன்னதாக நடவடிக்கை எடுத்தது ரஷ்ய அரசு. இதுதொடர்பான ஓர் பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் ரஷ்ய அரசு பதிவிட்டது. இதனை முன்னறிவிப்பின்றி பேஸ்புக் நீக்கியது. பேஸ்புக்கின் வரம்புகளுக்கு உட்படாமல் இருந்தால் இப்பதிவு நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் ரஷ்ய அரசு அதிர்ச்சி அடைந்தது.

இதனையடுத்து ரஷ்ய தொழில்நுட்பப் பிரிவு கண்காணிப்பு அமைப்பு பேஸ்புக் நிறுவனத்திற்கு 13 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜக்காரூபா கூறியதாவது:-

‘பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ரஷ்யாவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் ரஷ்யாவின் சட்டங்களை அவை மதிப்பதில்லை. இதனாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply