தான்சானியா: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு

தான்சானியா நாட்டின் அதிபராக இருந்தவர் ஜான் மகுஃபுலி. 61 வயதான அவர் கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் திடீரென நெரிசல் ஏற்றட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. அதிபர் இதயம் தொடர்பான நோயால் உயிரிழந்துள்ளார் என்று அரசு தெரிவித்தாலும், எதிர்க்கட்சி தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply