கொரோனா பாதிப்பு: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,398 பேர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் உள்ளது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் 2 ஆம் இடம் வகிக்கும் பிரேசில், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 3,398 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,25,284 ஆக உயர்ந்துள்ளது.பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 86,586 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,839,844 ஆக உயர்ந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply