யாழில் பொலிசாரின் கை விரலை கடித்த இளைஞனால் பரபரப்பு

பொலிசாரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .

தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிசாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.காயத்துக்குள்ளான பொலிசார் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply