அர்ஜெண்டினாவில் 30 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜெண்டினா 11-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அர்ஜெண்டினாவில் மேலும் 11,394 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஒரே நாளில் 156 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 252 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26.75 லட்சத்தை தாண்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply