பைக்கில் சென்றபடி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு: பட்டப்பகலில் நடந்த பயங்கரம்
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம், பான்கண்டி சாலையில் நேற்று இரு சக்கர வாகனங்களில் வந்த நபர்கள், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டபடி சென்றனர். முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு 10க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். இதனால் நிலைகுலைந்த அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். தாக்குதலில் ஒரு பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக சிலரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ஒரு சமுதாயத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்தது தொடர்பாக இந்த வன்முறை நடந்திருப்பதாக போலீசார் கூறி உள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க, கடுமையான கட்டுப்பாடுகளுடன்கூடிய மக்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 15ம் தேதிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி நடந்த வன்முறை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply